பேய்க்கு வயசாகுமா ஆகாதா.? தலைமுடி நரைக்குமா நரைக்காதா.? பிரம்மாண்டமாக வெளியானது சந்திரமுகி 2 ட்ரைலர்.!

chandramukhi 2 trailer : பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத், லட்சுமிமேனன், வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா சரத்குமார், மனோபாலா, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி இரண்டாவது பாகம். சந்திரமுகி முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நயன்தாரா ஜோதிகா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தை வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மொத்த குழு வெளியிட இருக்கிறது. படத்தை உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்துள்ளது.

அதேபோல் இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது இந்த நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டார் அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து ஹைதராபாத்திற்கு ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் சென்றிருந்தார்கள்.

ஏற்கனவே வெளியாகிய சந்திரமுகி டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது . இந்த ட்ரெய்லரில் வடிவேலு பேய்க்கு வயசாகுமா? ஆகாதா தலைமுடி நரைக்குமா நரைக்காதா? என ராகவா லாரன்ஸ் அவர்களிடம் டவுட் கேட்கிறார் இப்படி பல காமெடிகள் நிறைந்த பேய் படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே முதல் பக்கத்தில் ரஜினி மற்றும் வடிவேலு காம்பினேஷனில் காமெடிகள் அனைத்தும் பட்டையை கிளப்பியது இன்று வரை சந்திரமுகி காமெடி யாராலும் மறக்க முடியாது அந்த அளவு இருந்தது அதேபோல்  இந்த சந்திரமுகி இரண்டாவது பாகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது இதோ ட்ரைலர்.