OTT-யில் வெளியாகும் சந்திரமுகி 2.! இனி, நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி இருந்தா என கலாய்க்கும் ரசிகர்கள்..

Chandramukhi 2 release on OTT: ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படம்தான் சந்திரமுகி இந்த படத்தின் இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு பி வாசு இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது.

இரண்டாவது பாகத்தில் சூப்பர் ஸ்டார் கேரக்டரில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் ஜோதிகா நடித்திருந்த கேரக்டரில் பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் நடித்திருந்தார்கள். இவர்களுடைய கேரக்டர் முழுவதுமாக சொதப்பப்பட்டு இருந்து.

சந்திரமுகி 2 படத்தின் கதை முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்தான் பி வாசு கூறினாராம் அவருக்கு பலமுறை இந்த கதையை கூறியும் பிடிக்காத காரணத்தினால் கதையை தொடர்ந்து மாற்றி மாற்றி எழுதியுள்ளார். ஆனால் ரஜினிகாந்த் சந்திரமுகி 2 கதையை நிராகரித்த பிறகு சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க பி. வாசு முடிவு செய்துள்ளார்.

பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட சந்திரமுகி 2 படம் கலவை விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் பலத்தடி வாங்கியது. இவ்வாறு சந்திரமுகி 2 படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் இந்த படத்தில் யாருடைய கேரக்டரும் சரியாக அமையவில்லை என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இவ்வாறு கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் ஓடி வந்த சந்திரமுகி 2விரைவில் ஓடிடியில் வழியாக இருக்கிறது. அதாவது தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி சந்திரமுகி 2 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை கைப்பற்றியுள்ளதாம் நெட்பிலிக்ஸ் நிறுவனம். அதன்படி இந்த படம் வருகின்ற அக்டோபர் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.