வேட்டையனை தொடர்ந்து சந்திரமுகியாக மிரட்டும் நடிகை.. வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Chandramukhi 2 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு உருவான  திரைப்படம் சந்திரமுகி படத்தை பி. வாசு இயக்கினார். படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடிய இதோடு மட்டுமல்லாமல் வசூலில் புதிய சாதனை படைத்தது இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஜோதிகா, நயன்தாரா,  பிரபு, நசார், வடிவேலு, விஜயகுமார் என பல திரைப்படங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பார்ட் 2 பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் 18 வருடங்களுக்கு பிறகு தான் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது ரஜினிக்கு பதிலாக அவரது சிஷ்யன் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் அவருடன் இணைந்து ராதிகா சரத்குமார், வடிவேலு..

லட்சுமிமேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி, கங்கனா ரனாவத் மற்றும் பலர் நடித்து உள்ளனர். படத்தின் படபிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் பட குழு தீ விவரம் காட்டி வருகிறது. சந்திரமுகி 2 வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அடித்து கூறி உள்ளது.

அதற்கு முன்பாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுக்கப் படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. சந்திரமுகி 2 படத்திலிருந்து முதலில் வேட்டையன் புகைப்படத்தை வெளியிட்டது அது பெரிய அளவில் வைரலானதை தொடர்ந்து  தற்போது சந்திரமுகி பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதை பார்த்த பலரும் அழகு தேவதை எனக் கூறி கமெண்ட் அடித்து  லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் சந்திரமுகியாக மாறியிருக்கும் கங்கனா ரனாவத்தை..

chandramukhi 2
chandramukhi 2

Leave a Comment