ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குல திலக, சந்திரமுகி வேட்டையன் பராக் பராக்.! வெளியானது புதிய போஸ்டர்.

Chandramukhi 2 : சந்திரமுகி இரண்டாவது பாகத்தின் வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்து வந்தது அதேபோல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் சந்திரமுகி இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோதிகா நயன்தாரா பிரபு வடிவேல் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் பேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக வெளியாகிய சந்திரமுகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அது மட்டும் இல்லாமல் அதிக நாள் ஓடிய திரைப்படமாக இந்த திரைப்படம் பார்க்கப்பட்டது, இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திரமுகி இரண்டாவது பாகத்தை தற்பொழுது உருவாக்கியுள்ளார்கள். இதில் ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு பதிலாக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் கங்கன ரணவத், வடிவேலு, ராதிகா என பலர் நடித்துள்ளார்கள் லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட் செலவில் எடுத்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு மைசூர், ஹைதராபாத், சென்னை என பல இடங்களில் நடைபெற்று வந்தது கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரமுகி இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தார்கள்.. இந்த நிலையில் தற்பொழுது சந்திரமுகி இரண்டாவது பாகத்தின் டப்பிங் எடிட்டிங் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அப்படி இருக்கும் நிலையில் திடீரென பட குழு சந்திரமுகி திரைப்படத்தில் மிகவும் பிரபலமான வேட்டையின் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 10 மணிக்கு வெளியிட இருப்பதாக அதிகார பூர்வ தகவலை வெளியிட்டார்கள். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சந்திரமுகி படத்தில் மிகப்பெரிய கேரக்டரான வேட்டையன் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

முதல் பாகத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில்  தற்பொழுது ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் அதேபோல் முதல் பாகத்தில் லகலகலக என்ற வசனம் மிகவும் பிரபலம் அடைந்தது இந்த நிலையில் தற்பொழுது இந்த இரண்டாவது பாகத்திலும் பிரபலம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment