சந்திரமுகி பாதி, காஞ்சனா பாதி கலந்து செய்த கலவை நான்.! சந்திரமுகி 2 முழு திரைவிமர்சனம் இதோ.!

chandramukhi 2 full review : இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேல் ஆகியோர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் சந்திரமுகி இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திரமுகி இரண்டாவது பாகத்தை பி. வாசு அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்த சந்திரமுகி இரண்டாவது பாகத்திலும் ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத், லட்சுமிமேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், சிருஷ்டி தாங்கே என பலர் நடித்துள்ளார்கள். சந்திரமுகி திரைப்படத்தை விடுமுறை நாட்களை டார்கெட் செய்து இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் சந்திரமுகி 2 வை பார்க்க குழந்தைகள் வருவார்கள் என்ற பிளானில் தான் பட குழு ஜனவரி 28ஆம் தேதி ரிலீஸ் செய்துள்ளது. இந்த நிலையில் சந்திரமுகி முதல் பாகத்தை இரண்டாவது பாகம் முந்தியதா என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை

படத்தில் ரங்கநாயகி கதாபாத்திரத்தில் தான் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார் குடும்பத்தில் தொடர்ந்து பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்ற வரும் நிலையில் குலதெய்வ கோவிலுக்கு சென்று கும்பிட்டு வரலாம் என குடும்பத்துடன் வேட்டையபுரத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் வேட்டைய புரத்தில் இருக்கும் ஒரு பெரிய பங்களாவிற்கு வருகிறார் அதுதான் சந்திரமுகி பங்களா.

மேலும் அந்த பங்களாவில் உள்ள அமானுஷ்ய கதைகளை கேட்கும் அந்த வீட்டு இளம் பெண் ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ சந்திரமுகி அறைக்கு சென்று விடுகிறார் உடனே ரியல் சந்திரமுகியாகவே அந்த இளம் பெண் மாறுகிறார் அந்த சந்திரமுகியை அடக்க வேட்டையன் வருகிறார் மனோதத்துவ கதையாக வெளியாகிய இந்த திரைப்படத்தை பக்கா பேய் படமாக மாற்றி விட்டார்கள்.

சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் வடிவேலு காமெடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது ஆனால் இந்த இரண்டாவது பாகத்தில் பி. வாசு ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலுவை வைத்து காமெடியை முயற்சி செய்துள்ளார் அதில் தோற்று போய் தான் நிற்கிறார் p வாசு. மாமன்னன் திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு சந்திரமுகி 2 திரைப்படத்தில் கஷ்டப்பட்டு காமெடி செய்கிறார் என ரசிகர்களால் சிரிக்க முடியவில்லை.

இனிமேல் வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் கொஞ்சம் பார்த்து தான் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் சந்திரமுகி 2 என டைட்டில் வைத்ததற்கு காரணமே படத்தில் இரண்டு சந்திரமுகியை காட்டியுள்ளார்கள் அதேபோல் காமெடியில் கோட்டை விட்ட பி வாசு ஹாரர்ரில் படத்திற்கு பலம் சேர்த்து விட்டார்.

ரசிகர்கள் படத்தைப் பார்த்து இவர் தான் சந்திரமுகி என கெஸ் செய்கிறார்கள் அதேபோல் அவர்தான் சந்திரமுகி ஆகவும் மாறுகிறார் அதே போல் இரண்டாவது பாதிக்கு மேல் ரியல் சந்திரமுகியன கங்கனா ரனாவத் மற்றும் வேட்டையன் வரும் காட்சிகள் ஒவ்வொன்றையும் செதுக்கி வைத்துள்ளார் பி வாசு.

படத்திற்கு பலமாக ராகவா லாரன்ஸ் நடிப்பு கங்கன கங்கனா ரனாவத் நடிப்பு பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது ராகவா லாரன்ஸ் காஞ்சனா வில் நடித்தது போல் பிசிறு தட்டாமல் நடித்துள்ளார். அதேபோல் பி வாசு சந்திரமுகி 2 என டைட்டில் வைத்து விட்டோம் படத்தில் எந்த ஒரு சொதப்பலும் இருக்கக் கூடாது என ரொம்பவும் மெனக்கட்டு ஒரு என்டர்டைன்மென்ட் படமாக இந்த திரைப்படத்தை கொடுத்துள்ளார். படத்தில் நடித்துள்ள லட்சுமிமேனன் மற்றும் பல நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார்கள் கிராவானியின் பிஜிஎம் மிரட்டிய அளவிற்கு பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை வடிவேலுவின் காமெடி சொதப்பல்தான். குடும்பத்துடன் ஜாலியாக ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திரைப்படம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.