சந்திரலேகா சீரியல் நடிகை திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் சன் டிவி தொகுப்பாளரா.! வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்..

பிரபல சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய வருங்கால கணவர் குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவருக்கு திருமணம் முடிந்துள்ளது. எனவே ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியான சன் டிவியில் தொடர்ந்து ஏராளமான வித்தியாசமான கதை உள்ள சீரியல்களை சன் டிவி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் சன் டிவி சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ஸ்வேதா பந்தேகர்.  அதாவது கடந்த சில மாதங்களுக்கும் முன்பு நிறைவடைந்த சீரியல் தான் சந்திரலேகா இந்த சீரியல் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்வேதா.

இவர் முதலில் சில விளம்பர படங்களில் நடித்து பிறகு தமிழில் 2007ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். பிறகு இன்னும் சில திரைப்படங்களில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் 2008ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடிப்பதை தொடங்கினார். அந்த வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகள் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

swetha 1
swetha 1

மேலும் இவர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் ஸ்வேதா சில தினங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொள்ளும் வருங்கால கணவருடன் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது வாழ்க்கை வாழ்க்கைத் துணையை கைபிடித்தேன் என்று கூறியிருந்தார்.

எனவே அவர் திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளை யார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் தற்போது ஸ்வேதாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது அதாவது முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளர் மால் முருகன் என்பவரை தான் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Leave a Comment