சாம்பியன் ஷிப் டெஸ்ட் உலககோப்பை : சேவாக் போன்று எடுத்த உடனே அதிரடி காட்ட கூடிய வீரரை இழட்டி விட்ட நிர்வாகம்.? காரணம் ரொம்ப சப்பையா இருக்கு.

இந்திய அணி தற்போது சாம்பியன் ஷிப் டெஸ்ட் உலககோப்பை விளையாட ஆயுதமாக்கி உள்ளது  இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன இதைத்தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்தில் அடுத்ததாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு சில போட்டிகளில் விளையாடுகிறது.

இதனால் இந்திய அணி தற்போது ஆயத்தமாகி தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது மேலும் சம்பியன் ஷிப் டெஸ்ட் உலக கோப்பை போட்டியில் எந்தெந்த வீரர்கள் விளையாட உள்ளனர் என்பதை சமீபத்தில் பிசிசிஐ தெரிவித்தது இதில் ஒரு சில முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை.

அவர் வேறுயாரும் இல்லை இளம் வீரரான பிரித்வி ஷா தான். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாத இவரை தூக்கி எறிந்துவிட்டு டெஸ்ட் போட்டிகளில் இளம் வீரரான சுமன் களில் என்பவருக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளனர் ஆனால் பிரித்வி ஷா சமீபத்தில் நடந்த  உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தனது அசாதாரணமான வெளிப்படுத்தி தனது திறமையை மீண்டும் நிரூபித்து உள்ளார் இவர் இந்த டெஸ்ட் அணியில் இடம் பெறாதது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் பிரித்வி ஷா எடுக்கவில்லை என்பது குறித்து தனது விமர்சனங்களை கூறி வருகின்றனர் இதற்கு பிசிசிஐ நிர்வாகத்திலிருந்து ஒருவர் பிரித்வி ஷா அசாதாரணமான உடையவர் ஆனால் அவரது உடல் எடை தான் தற்போது பிரச்சனையாக இருக்கிறது என்று கூறி அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஆனால் சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சரண் தீப்சிங் என்பவர் பிரித்வி ஷா இளம் வீரர் அவரை விளையாட வையுங்கள். இதுபோன்று செய்வது தவறான செயல் இன்னும் அவருக்கு பல வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

மேலும் சேவாக் போன்று எடுத்த உடனே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய தன்மை இவரிடம் உண்டு என கூறினார். வேலு கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பிரித்வி ஷாவுக்கு ஆதரவாக தற்போது குரல் கொடுத்து வருகின்றனர்.

Leave a Comment