சந்தையில் சரியான விலைக்குப் போன சீயான் விக்ரமின் பிரம்மாண்ட திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் திரைப்படத்திற்காக தன்னை வருத்து எடுத்துக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் என்றால் அது சியான் விக்ரம் தான் அந்த வகையில் இவர் ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் தன்னுடைய நடிப்பு மட்டுமில்லாமல் தோற்றத்தையும் மாற்றம் செய்து நடிப்பதில் இவர் வல்லவர்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இவருடைய மவுசு தமிழ் சினிமாவில் எகிரி விட்டது என்றே சொல்லலாம்.

இதனை தொடர்ந்து தற்பொழுது மிகப் பெரிய பட்ஜெட்டில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்கள் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார் மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

அது மட்டுமில்லாமல் தற்பொழுது இந்த திரைப்படத்தில் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெறுவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மிக ஆவலுடன் இருக்கிறார்கள் இவ்வாறு ரசிகர்களின் இந்த அளவிற்கான எதிர்பார்ப்பு உருவாவதற்கு காரணம் இந்த திரைப்படத்தின் கதை தான்.

அந்த வகையில் இந்த திரைப்படம் கே ஜி எஃப் ல் வாழ்ந்த மனிதர்கள் குறித்த திரைப்படமாக இருக்கும் என பா ரஞ்சித் அவர்கள் கூறிய நிலையில் இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து எப்பொழுது வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் தற்பொழுது சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் என்ற திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது மேலும் இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நெட் பிலிக்ஸ்  நிறுவனமானது வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

thangalaan
thangalaan

மேலும் இந்த நிறுவனம்  இந்த உரிமைக்காக சுமார் 35 கோடியை செலவழித்து வாங்கி உள்ளதாக தெரியவந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே இத்தனை கோடி வசூலா என ரசிகர்கள் மூக்கின் மேல் கை வைக்கும் அளவிற்கு உருவாகி வருகிறது.

Leave a Comment