நள்ளிரவில் விவேக்குடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த செல்முருகன்.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா உலகில் எத்தனை காமெடி நடிகர்கள் வளர்ந்து வந்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் சின்னக் கலைவானர் விவேக் இவர் எந்த திரைப் படங்களில் நடித்தாலும் அந்த திரைப்படங்களில் தனது ரசிகர்களுக்கு ஒரு கருத்தைக் கூற வேண்டும் என்பதற்காக சமுதாய விழிப்புணர்வு கொண்ட ஒரு கருத்தை கண்டிப்பாக கூறியிருப்பார்.

விவேக் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து தனது காமெடி திறமையை இயல்பாக காட்டி ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்களுக்காக இவருக்கு பத்மஸ்ரீ என்ற விருதையும் கொடுத்தார்கள் இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து வந்த விவேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

திடீரென்று மாரடைப்பு காரணமாக கடந்த 17ம் தேதி இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் அவரது இழப்பு சினிமா பிரபலங்கள் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் தற்போது வரை அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

https://twitter.com/Thilakavathi0/status/1384573986445488132?ref_src=twsrc%5Etfw

அதேபோல் விவேக்கின் நெருங்கிய நண்பரும் நடிகருமான செல் முருகன் அவரது இழப்பை தாங்க முடியாமல் சமீபத்தில் ஒரு பெரிய பதிவை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களை உருக வைத்தவர் அவர் பகிர்ந்த பதிவானது அப்பொழுது ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலானது.

இந்நிலையில் அதே போல் தற்போதும் விவேக்கை பற்றி செல் முருகன் அவருடன் இருக்கும் போது எடுத்த வீடியோ காணொளி ஒன்றை நேற்று இரவு 1.43 மணிக்கு அவர் ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இவர் பகிர்ந்து பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த நேரத்தில் கூட உங்களுக்கு சிந்தனை விவேக்குடன் தான் இருக்கிறது என்று இவர் பகிர்ந்த பதிவை பார்த்து நெகிழ்ந்து விட்டார்கள் ரசிகர்கள் என்றுதான் கூறவேண்டும்.அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளி தற்போது ரசிகர்களிடையே மிகவேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment