சொத்துக்கு வாரிசு வேணும்.. வயதானாலும் பரவாயில்லை என குழந்தை பெற்றுக் கொண்ட பிரபலங்கள்..

Tamil actress: சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான பிரபலங்கள் வயதான காலத்தில் கூட தான் திருமணம் செய்து கொண்டவர்களை விவாகரத்து செய்துவிட்டு தனக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி இரண்டு மூன்று திருமணம் செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்பொழுது இவ்வாறு திருமணம் செய்துக் கொண்டு வயதான காலத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகர், நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

ராதிகா சரத்குமார்: சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடியான ராதிகா சரத்குமார் இருவரும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவர்களுக்கு 2004ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த பொழுது சரத்குமாருக்கு 51 வயசு, ராதிகாவிற்கு 42 வயது இப்படி ஒரு வயதில் இவர்களுக்கு குழந்தை தேவைதானா என அப்பொழுதே பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

ரேவதி: இவர் தனது கணவர் சுரேஷ் சந்திர மேனனை கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்த நடிகை ரேவதி ஒரு கட்டத்தில் நம்மளுக்கும் ஒரு துணை வேண்டும் என்பதை உணர்ந்து டெஸ்ட் டியூப் வழியாக கருவுற்று தனது 47 வயதில் குழந்தையை பெற்றெடுத்தார்.

நீலிமா ராணி: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான நீலிமா ராணி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் குறிப்பிட்ட கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதனை அடுத்து சின்னத்திரையில் மெட்டி ஒலி, தென்றல் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இரண்டாவது முறை கருவுற்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அப்பொழுது இவருக்கு 39 வயது.

சந்திரா லக்ஷ்மன்: சின்னத்திரை மூலம் பிரபலமான சந்திரா லக்ஷ்மணன் காதலிக்க நேரமில்லை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் இவர் தனது 40 வயதில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றுக் கொண்டார்.

பிரகாஷ் ராஜ்: முதல் மனைவியின் விவாகரத்திற்கு பிறகு வர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது இரண்டாவது மனைவி போனி வர்மா உடன் தனது 50 வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இவர் முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரபுதேவா: தனது முதல் மனைவியைப் பிரிந்த பிரபுதேவா நயன்தாரா காதலித்து வந்த நிலையில் சில பிரச்சனைகளால் இவர்கள் பிரிந்து விட்டனர். எனவே சில வருடங்கள் கழித்து மருத்துவர் ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில் அப்பொழுது பிரபுதேவாவிற்கு 50 வயது.

Leave a Comment