தனுஷுக்கு புதிய அடைமொழி வைக்க துடிக்கும் பிரபலம்.? ஒத்து கொள்வாரா அசுரன்.

0

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை வேறுவிதமாக கையாண்டு சிறப்புக்குரிய திரைப்படங்களை கொடுத்து வருகிறார் இவரது திரைப்படங்கள் இந்திய அளவில் பிரபலம் அடைவதன் மூலம்  தமிழையும் தாண்டி பாலிவுட் ஹாலிவுட், கோலிவுட் என வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இவர் நடிக்கும் படத்தை ரீமேக்கில் பலர் நடித்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் கூட வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதைப தொடர்ந்து பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு தற்போது உருவாகி வருகிறது.

தனுஷ் கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார் அதைத்தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதன்பிறகு அவரது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் அவரது அண்ணன் செல்வராகவன் சமிபத்திய பேட்டி ஒன்றில் கூறியது தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அடைமொழி மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

அதுபோல தனுஷுக்கும் நான் வருவேன் திரைப்படத்தில் ஒரு அடைமொழி வைக்க உள்ளேன் ஆனால் அதற்கு தனுஷ் ஒப்பந்தம் கொடுத்தால் மட்டுமே நிறைவேறும் என கூறியுள்ளார்.