இயக்குனர் அட்லீயை பற்றி புகழ்ந்து பேசும் பிரபலம் – எதனால் தெரியுமா..

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் இயக்குனர் அட்லீ. கடைசியாக இவர் தளபதி விஜயை வைத்து பிகில் என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் அதன் பின் திடீரென பாலிவுட் பக்கம் திசை திரும்பி..

பாலிவுட்டில் பாட்ஷாவாக வலம் வரும் நடிகர் ஷாருக்கானுக்கு ஒரு புதிய கதையை 2020 ஆம் ஆண்டு சொல்லி உள்ளார். ஆனால் அப்போது சில பிரச்சினைகளில் சிக்கி இருந்ததால் படம் எடுக்க முடியாமல் போனது நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை பிரியாமணி நடிக்கிறார் மற்றும் மல்கோத்ரா போன்ற பாலிவுட் பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஷாருக்கான் அப்பா மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க தீவிரவாதிக்கும் ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டை போலவே காட்சிகள் அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் படக்குழு இந்த படத்தின் பெயரை அதிரடியாக அறிவித்துள்ளது. ஷாருகான் அட்லீ இணையும் இந்த படத்தின் பெயர் “ஜவான்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. படம் 2023 ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் படக்குழு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகாரபூர்வமாக இந்த தகவலை வெளியிட்டதை அடுத்து இதைப் பார்த்த பிரபலங்கள் பலரும் தனது வாழ்த்துக்களை அட்லீக்கு சொல்லிவந்தனர். இசை அமைப்பாளர் அனிருத் அவர்களும் சகோதரா உன்னை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. இந்த படம் தங்களுக்கு மிகவும் சிக்கலாக அமையும் எனவும் கூறியிருந்தார்.

Leave a Comment