பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபலம் – திடீர் விலகல்.? என்ன காரணம் தெரியுமா.? ஷாக்கான மக்கள்.

சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீரிஸ் போன்ற ஹிட் சீரியல்களை இயக்கி வந்த பிரவீன் பெண்ணெட் என்பவர் இந்த தொடரை சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக எடுத்து வருகிறார்.

இந்த சீரியல் மக்கள் அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு தொடராகும். விஜய் டிவி தொலைக்காட்சியில் நம்பர் ஒன் சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா ஆகும். இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலருக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன.

ஆனால் இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் இந்த தொடரின் மூலம் பாப்புலரான பிரபலங்கள் ஒவ்வொருவராக வெள்ளித்திரையிலோ அல்லது வேறு நிகழ்ச்சியில் வாய்ப்புகள் கிடைத்தால் சென்று விடுகின்றனர். அதுபோல் முதலில் கதாநாயகனுக்கு தங்கையாக நடித்து வந்த அறிவுமணி என்பவர் இந்தத் தொடரில் பாதையிலிருந்து விலகி வேறு தொடருக்கு சென்றார்.

சமீபத்தில் கூட இந்த சீரியலில் இருந்து அகிலன் என்பவருக்கு வெள்ளித்திரையில் டாப் நடிகரான விஷாலுடன் இணைந்து நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது அதனால் இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார்.

அதுபோல் தற்போது வந்த அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகின. இவருக்கும் பட வாய்ப்புகள் வந்து உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என தகவல்கள் வந்துள்ளன. ஆனால் உண்மையா என்பது சரியாக தெரியவில்லை.

Leave a Comment