விஜயின் எமோஷனல் சீன்னை பார்த்து கதறி அழுத முக்கிய பிரபலம்..

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் சமீபகாலமாக ஆக்சன் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நிலையில் திடீரென தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

படம் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது முதல் நாளே படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் நொம்பி வழிந்தாலும் அதிலேயும் உள்ளே நுழைந்து தயாரிப்பாளர் தில் ராஜு, வம்சி, ராஷ்மிகா மந்தனா, ஷாம் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் தமன் என பலர் முதல் நாள் முதல் ஷோவை பார்த்து உள்ளனர்.

படம் முழுக்க முழுக்க எமோஷனல் அதேசமயம் ஆக்சன் காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்தது குறிப்பாக கடைசி கிளைமாக்ஸ் காட்சி பலரையும் அழ வைத்தது. அந்த அளவிற்கு விஜய் எமோஷனலில் பின்னி பெடல் எடுத்திருந்தார். இதுவரை படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அனைவருமே பாசிட்டிவானாக விமர்சனங்களையும் கொடுத்து வருவதால்..

நிச்சயம் வாரிசு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படம் குறித்தும் விஜய் குறித்தும் முக்கிய பிரபலம் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு பதிவிட்டு உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

அண்ணா, விஜய் அண்ணா எமோஷனல் சீன் பார்த்து இதயபூர்வமாக அழுதுவிட்டேன். கண்ணீர் விலைமதிப்பில்லாதது என தமன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா என குறிப்பிட்டு இருக்கிறார் இந்த பதிவு தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள். அந்த ட்விட்டர் பதிவை..

 

Leave a Comment