அஸ்வினை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வந்த “குக் வித் கோமாளி” பிரபலம் – யார் அது தெரியுமா.? வியப்பில் ரசிகர்கள்.

விஜய் டிவியில் பிரபல சமையல் மற்றும் காமெடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி முதல் சீசன் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்ஜாய் செய்து தனது கவலைகள் மறந்து ரசித்து பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் இதில் கோமாளியாக புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா  போன்றவர்கள் நடத்தும் லூட்டிகள் மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றன. இதில் கலந்து கொண்ட பல போட்டியாளர்களும் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் ரீச் அடைந்து வெள்ளித்திரையிலும் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

அந்தவகையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை கனி பெற்றிருந்தார். இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சமையல் போன்ற பல கலைகளை தெரிந்து வைத்திருப்பவர். கனியின் கணவர் திருவும் ஒரு சிறந்த இயக்குனர் ஆவார். கனியின் தங்கைகள் விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனா போன்ற இருவரும் சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கனியும் தற்போது சினிமாவில் ஹீரோயினாக கால்தடம் பதிக்க உள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் “வள்ளிமயில்” திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார் இதில் ஹீரோயினாக பிரபல நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனாவின் மகள் ஸ்ரீமயி என்பவர் முதல் முறையாக..

இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அந்தப் படத்தில்தான் குக் வித் கோமாளி கனியும் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் தான் வெளிவந்தது அதையடுத்து படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்படும் என தெரியவருகிறது.

Leave a Comment