தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி கொண்டார் இவர் தமிழில் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜய், ரஜினி, அஜித் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து மற்றும் சோலோ திரைப்படங்களிலும் நடித்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
தற்போது கூட இவர் கைவசம் கோல்ட், கனெக்ட், ஆக்சிசன் போன்ற பல படங்களை வைத்துள்ளார் மேலும் பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்ற திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படி பிஸியாக இருந்துவரும் நிலையில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கடந்த ஏழு வருடங்களாக இருவரும் காதலித்து வருகின்ற நிலையில் நாளை இவர்கள் இருவருக்கும் மகாபலிபுரத்தில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடைபெற உள்ளது .
மேலும் இவர்களது திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கண்டு மகிழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருந்து வந்துள்ளார். ஆனால் அவரை தற்போது பின்னுக்குத்தள்ளி இளம் நடிகை பூஜா ஹெக்டே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி அடையாததால் தெலுங்கு ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வந்தார் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார் இந்தப் படமும் பெரிய அளவு வெற்றி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கில் பூஜா ஹெக்டே விஜய் தேவர்கொண்டா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இந்தப் படத்திற்காக பூஜா ஹேக்டே சம்பளமாக 5 கோடி வாங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்மூலம் நயன்தாரா இதுவரை படங்களுக்கு 4 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் அவரது சம்பளத்தை பூஜா ஹேக்டே ஓவர்டேக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.