நான்காவது முறையாக தளபதி 67 திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகை.! அட நம்ம ஆளு எனக்கூறும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற திரைப்படமாகும்.

மேலும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என்ற திரைப்படத்தை உருவாகி வருகிறது.  இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படம் நிறைவடைவதற்குமுன்பே தளபதி அடுத்த திரைபடத்திற்கு தயாராகி விட்டார்.

அடுத்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற திரைப்படத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த திரைப்படம் அக்டோபர் 3-ஆம் தேதி ஆரம்பிக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் அனிருத் தான் இசை அமைத்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்த நிலையில் மேலும் தளபதி 67 திரைப்படத்திலும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தளபதி 67 என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கப் போகிறார் என கூறபடுகிறது.மேலும் இவர் விஜயுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை சமந்தா இந்த திரைப்படம் எப்படி வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

samantha
samantha

தற்போது சமந்தாவிர்க்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல  இரண்டு காதல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா நடிகை சமந்தா போன்ற பலரும்இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள். அதன்பிறகு சமந்தா தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா நடித்துவரும் குஷி என்ற திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

Leave a Comment