வலிமை சண்டை காட்சி உளறி கொட்டிய பிரபலம்.!

thala

தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்கள் பலரும்  சினிமா உலகில் ஒரு வருடத்தில் ஒரு படத்தையாவது நல்ல முறையில் கொடுக்க முனைப்பு காட்டுவார்கள் அந்த வகையில் தல அஜித் சமீபகாலமாக வருடத்திருக்கு ஒரு ஹிட் படத்தை கொடுத்து வருகிறார். மேலும் சிறப்பான கதைகளை  தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அந்த படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அந்த வெற்றியை தொடர மீண்டும் ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் கைகோர்த்தார் ஆனால் இந்த திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் ஷூட்டிங் முடிந்த பாடு இல்லாமல் படக்குழு திண்டாடி வருகிறது.

மேலும் படக்குழு இதுவரையிலும் எந்த ஒரு அப்டேட்டையும் வெளிவிடாமல் இருப்பதோடு இந்த படத்தில் நடித்தவர்கள் வலிமை படம் குறித்து அரைகுறையாக அப்டேட்களை வெளியிட்டதால் ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர்.

இருப்பினும் வேறு வழி இல்லாமல் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் வலிமை படத்தின் அப்டேட் படக்குழுவினரிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர் ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறது படக்குழு. இந்த நிலையில் வலிமை படத்திலிருந்து சூப்பரான செய்தியை பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல சமீபகாலமாக சண்டைக் காட்சிகளில் புகழ்பெற்ற திலீப் சுப்பராயன் அவர்கள்தான் தல அஜித்தின் வலிமை படம் குறித்து செய்தியை கூறியுள்ளார் அவர் கூறியது வலிமை படத்தில் அஜீத் 5 சண்டைக் காட்சிகளில் விளையாடி உள்ளார்.

dilip suburayan
dilip suburayan

அதில் ஒவ்வொரு சண்டை காட்சியும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும், பார்பவர்கள் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும். மேலும் இதுவரை எந்த படத்திலும் இல்லாத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சியில் தூக்கி நிப்பாட்டி உள்ளது.