ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து காணமல் போன பிரபலங்கள்.! Part-1

சினிமாவில் அதிகமான நடிகைகள் மற்றும் நடிகர்கள் இருந்து வருகிறார்கள் அதில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பிறகு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகிய பிரபலங்களைப் பற்றி தற்போது நாம் பார்க்கே இருக்கிறோம்.

இந்த வரிசையில் நாம் முதலில் பார்க்க இருப்பது நடிகை பிரியாஜெல் இவர் அஜித் நடித்த ரெட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் உள்ள ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என்ற பாடல் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் இவர் நடிக்கவில்லை ஆனால்  தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்டபல மொழிகளில் நடித்துள்ளார். இவருடைய கடைசி படம் 2006 இல் வெளிவந்த பைரவி என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு பிறகு  சினிமாவை விட்டு விலகிவிட்டார். ஆனால் தற்போது திருமணம் செய்து கொண்டு சவுத் கரோலினா வில்  செட்டிலாகிவிட்டார்.

அடுத்ததாக காதல் மன்னன் படத்தில் நடித்த மானு இத்திரைப்படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். ஆனால் அதன்பிறகுஇவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் 2014ல் வெளிவந்த என்ன சத்தம் இந்த நேரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் மிகப்பெரிய கிளாசிக்கல் டான்ஸ்சரும் ஆவார். ஆனால் இவர் சந்திப்புரா என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார்.

maanu
maanu

அடுத்ததாக இந்த வரிசையில் பிரியங்கா கௌதாரி இவர் ஜே ஜே ,படத்தில் நடித்தவர்தான் இவர் அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு  கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்தில் வாடா வாடா பையா என்ற ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். ஆனால் அதன்பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற பிற மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் பாஸ்கர் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

priyanka kothri
priyanka kothri

அடுத்ததாக மோனிகா அவர்கள் உள்ளார். இவர் மின்சார கண்ணா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் அவர் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்காவிட்டாலும் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் முதலில் நிறைவேற்றி விட சின்னத்திரையில் இருந்து நமது கவனம் கொடுத்து வருகிறார்.

monica
monica

அடுத்ததாக இந்த வரிசையில் ரிங்கி கன்னா இவர் பிரசாந்தின் மஜ்னு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் அதன்பிறகு இவர் எந்த ஒரு தமிழ் சினிமாவிலும்நடிக்கவில்லை. ஆனால் ஒரு சில திரைப்படங்களில் 2014 வரைக்கும் நடித்த இவர் சமீர் சரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என வாழ்ந்து வருகிறார்கள்.

அடுத்ததாக இந்த வரிசையில் நடிகை ரீயாசன் இவர் தாஜ்மஹால், குட் லக் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் தான் இவர். அதுமட்டுமல்லாமல் ஹிந்தி பெங்காலி ஒரிசா போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். எப்படியாவது நிரந்தரமான ஒரு நடிகையாக வேண்டும் என்ற தட்டுத்தடுமாறி அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு படமாவது நடித்து வந்தார் கடைசியாக 2017 இல் லோன்லி கேர்ள் என்ற ஹிந்தி படத்தில் அடுத்த இவர்  சிவம் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

riya sen
riya sen

ரேகா வித்யா வாஸ் இவர் புன்னகைப்பூவே, நேற்று இன்று நாளை, திரிரோசஸ் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு கடைசியாக பேசும் படம் என்கிற 2014ல் வெளிவந்த தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கர்நாடகம்,தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

ப்ரீட்டி ஜஹாங்கிணி இவர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஹலோ என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இந்த ஒரு திரைப் படத்தில் மட்டும் நடித்து விட்டு தமிழ் சினிமாவை விட்டு விலகிவிட்டார். ஆனால் இந்தியாவில் உள்ளஅனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment