திருமணம் செய்து கொள்ளாமல் காதல் ஜோடிகளாக சுற்றும் பிரபலங்கள்.! போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது…

காதலர் தினமான இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடும் கோலிவுட் காதல் ஜோடிகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் கதிரவன் இவர் தனது காதலியான சினேகாவுடன் இந்த ஆண்டு காதலர் தினத்தை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கதிரவனின் காதலி சர்ப்ரைஸாக வந்து கதிரவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார் இந்த நிகழ்வு யாராலும் மறக்க முடியாது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா இவர் இந்த ஆண்டு காதலர் தினத்தை பாலிவுட் நடிகர் விஜய் வருமா உடன் கொண்டாடி வருகிறார். இவர்களுடைய காதலை புத்தாண்டு பார்ட்டியில் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.

பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஓவியா கடந்த ஓராண்டாகவே துபாயை சேர்ந்த மியூசிசியன் என்பவரை காதலித்து வருகிறார் அது மட்டுமல்லாமல் அவருடன் டேட்டிங் செய்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை இவர்கள் இருவரும் மிக சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறார்கள்.

தெலுங்கு சினிமாவிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தானா இவர் நடிகர் விஜய் தேவர்கொண்டாவை காதலித்து வருவதாக சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு சென்று சுற்றி வரும் புகைப்படங்கள் அதனை உறுதி செய்தன. இந்த சமயத்தில் சமீபத்தில் இவர்கள் இருவரும் மாலத்தீவு மற்றும் துபாய்க்கு ஜோடியாக சென்றது குறிப்பிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் மாடல் தாரணி என்பவரை காதலித்து வருகிறார், அதைத் தொடர்ந்து 90களில் நடிகராக இருந்து தற்போது வில்லனாக திகழ்ந்துவரும் நடிகர் வினை அவர்கள் நடிகை விமலா ராமனுடன் டேட்டிங் செய்து வருகிறார், மேலும் நடிகர் சித்தார்த் அதிதி ராவை காதலித்து வருகிறார், நடிகை சுருதிஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்,

நடிகை ரகுல் பிரீத் சிங்-ஜாக்கி என்பவரை காதலித்து வருகிறார் இவர்கள் இருவரும் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள், இவர்களைத் தொடர்ந்து இந்த வரிசையில் பிக் பாஸ் மூலம் பிரபலமான அமீர் மற்றும் பாவனியும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் தன்னுடன் கல்லூரியில் படித்த ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார்.

Leave a Comment

Exit mobile version