ஜெயிலர் படத்தை பார்க்க போட்டி போட்டுக்கிட்டு வந்த நட்சத்திர பிரபலங்கள்.. மாஸ் காட்டிய அனிருத்

Jailer movie : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரஜினிக்கு 169 வது திரைப்படம் ஆகும். சன் பிக்சர் தயாரித்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன்..

சிவராஜ்குமார், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் போன்ற பல முக்கிய நடிகர் நடிகைகள் நடித்திருக்கின்றனர். ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள காவாலா பாடல் ஏற்கனவே வெளியாகி உலக அளவில் ட்ரெண்ட் ஆகியது இந்த பாடலில் தமன்னாவின் நடனம் ரசிகர்களை துண்டி இழுத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் டிரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று வெளியான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்துள்ளனர். படத்தைப் பார்த்து வரும் ரசிகர்களும் நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றன.

dhanush
dhanush

ஆனால் ஜெயிலர் படம் வெளியான இந்த நேரத்தில் ரஜினி மட்டும் இமயமலை சென்று இருக்கிறார். இருந்தாலும் அவர் ஏற்கனவே ஜெயிலர் படத்தை முழுவதுமாக பார்த்துள்ளார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் மற்றும் அனிருத் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு ஜெயிலர் படத்தை பார்க்க வந்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜெயிலர் FDFS பார்க்க வந்துயுள்ளார்.

aishwarya rajinikanth
aishwarya rajinikanth

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் முன்பு பாடல் பாடியிருக்கிறார் அதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Leave a Comment