வருத்தத்தில் இருக்கும் ஈரமான ரோஜாவே காவியா.! அவரே வெளியிட்ட வீடியோ..

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை கேப்ரில்லா. அதன்பிறகு 7 சி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தார்.  இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘3’ திரைப்படத்தில் சுருதிஹாசனும் தங்கையாக நடித்திருந்தார்.

அதன்பிறகு அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதன்பிறகு தான் ஈரமான ரோஜாவே சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் இந்த சீரியலில் நடித்த மிகவும் பிஸியாக இருந்த வரும் இவர் தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் ஏராளமான மேக்கப் வீடியோ, டூர் சென்ற வீடியோ, ஃப்ரிட்ஜி டூர் என பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.  அந்த வகையில் அவர் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அந்த சேனலில் கேப்ரியல்லாவுக்கு ‘இப்படி ஒரு நிலைமையா’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.  அதாவது சமீபத்தில் இவர் புதிய கார் ஒன்றை வாங்கினார் அது ரிப்பேர் ஆகி உள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் ‘ என் கார் போச்சே’ என்று சோகமாக ஆரம்பிக்கிறார்.

எந்த ஒரு புதிய பொருளை வாங்கிய உடன் பழுது ஏற்பட்டால் கஷ்டமாக தான் இருக்கும் அது கஷ்டத்தில் தான் நான் பேசுகிறேன். கார் எப்போது வாங்கப்பட்டது என்ற விவரத்தை கூறி காரில் என்னலாம் பிரச்சனைகள் ஏற்பட்டதுள்ளது என்று ஒவ்வொன்றாக கூறுகிறார்.  பின்பு சர்வீஸ் முடிந்த அந்த காரை ஓட்டிப் பார்த்து சரியாக இருக்கிறதா என்று செக் செய்கிறார்.

‘ நான் ஒவ்வொரு வாட்டியும் ஆட்டோவிற்கு வெயிட் பண்ணி படத்துக்குக் கூட ஒழுங்காக போக முடியல, இனி கார்ல நிம்மதியா போவேன்,  அதே மாதிரி வண்டியில எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் உடனே சர்வீஸ் கொடுத்துடுங்க’ என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.