ajith-priyanga-mohan

அஜித் செல்லும் நாடுகளுக்கு பின்னாடியே செல்லும் பிரியங்கா மோகன்.! வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்.அஜித் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் என்ற நாடுகளுக்கு நடிகை பிரியங்கா மோகம் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திவுள்ளது.

அதாவது நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் நடிகர் அஜித் லண்டனில் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பாரீஸ் ஈபிள் டவர் முன் அஜித் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவும் வைரலானது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணம் சென்றிருந்தார். அது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் லண்டனில் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்.

priyanga-mohan--1
priyanga-mohan–1

அந்த வகையில் லண்டனில் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் தற்பொழுது பாரீஸ் நகரில் ஈபில் டவர் முன் எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு ஏராளமான லைக்குகள் குவிந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

priyanka-mohan
priyanka-mohan

இது குறித்த ரசிகர்கள் அஜித் போகும் நாடுகளுக்கு பின்னாடியே பிரியங்கா மோகன் செல்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர்,டான் ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

வீடியோவை பார்க்க எங்கே கிளிக் செய்யவும்.

anjali-new-dance-video

அஞ்சலி நடனமாடியுள்ள ஸ்பெஷல் பாடல் வீடியோ இதோ.! சமந்தாவை ஓவர் டேக் செய்து விடுவார் போல..

தமிழ் சினிமாவில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி. இந்த திரைப்படத்தில் இவர் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதால் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை வரிசையாக பெற்றார்.

இதன் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய முழுவதும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இவ்வாறு ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவதன் மூலம் இவர்களுக்கு சம்பளமும் அதிகரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நடனமாடும் பாடலும் சூப்பர் ஹிட்டாகி விடுகிறது.

இந்நிலையில் தற்பொழுது சமந்தாவை தொடர்ந்து அஞ்சலியும் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதின் நடிக்கும் Macherla Niyojakavargam படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இத்திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கேத்தரின் தெரசா உள்ளிட்டவர்கள் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

இந்த நிலையில் அஞ்சலி நடனமாடியுள்ள RaRa Reddy I Am Ready என்ற ஸ்பெஷல் பாடல் தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

cook-with-comali12

பிரபல நடிகரின் படத்துக்கு இசையமைத்துள்ள குக் வித் கோமாளி பிரபலம்.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ கார் மற்றும் சீரியல் ஆகியவற்றிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  இதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் பணியாற்றி வரும் அனைவருக்கும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் மன அழுத்தத்தில் இருந்து வெளி வருவதாக கூறி வருகிறார்கள். முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது சீசனும் இறுதி கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகர் ஒருவர் சினிமாவில் முதன் முறையாக என்ட்ரி கொடுத்துள்ளார். தகவல் இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதாவது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் மிர்ச்சி சிவா.

தனது காமெடி கலந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தற்பொழுது காசேதான் கடவுளடா,சுமே, கோல்மால், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரன் உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில்  சிங்கிள் ஷங்கரும் மாஸ்டர் போன் சிம்ரன் திரைப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக மேகம் ஆகாஷ், அஞ்சு குரியன் இந்த படத்தில் ஹீரோயின்களாக நடித்த வருகின்றனர். மேலும் டாக்டர் மனோ, மாகாபா ஆனந்த், திவ்யா கணேஷ், KPY பாலா உள்ளிட்டவர் முக்கிய இடத்தில் நடித்து வருகின்றனர்.

லார்க் ஸ்டுடியோஸ் இந்த படத்தினை தயாரிக்கிறது. மேலும் லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.  டிப்ஸ் தமிழ் இந்த படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிவுள்ளனர்.

இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ஜோடி சேரளாமா என்ற பாடல் நாளை வெளியாக இருக்கிறது இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலம். பிரபலமான பரத் இசையமைத்துள்ளார் லியோன் ஜேம்ஷீய்டன் இணைந்து பாடியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.