dhanush

தனுஷின் தாய் கிழவி பாடலை தனது பாணியில் பாடி அசத்திய மாற்றுத்திறனாளி யூடியூப் பிரபலம்.! வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் சமீப காலங்களாக கோலிவுட்டையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து பல மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் உருவாகி வருகிறது.

தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் தனுஷை இத்திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.  மேலும் இத்திரைப்படத்திற்காக ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிரி உள்ளது.இவ்வாறு தனுஷை தற்பொழுது ஒட்டுமொத்த சினிமாவே தூக்கி வைத்து கொண்டாடி வந்தாலும் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் உருவ கேள்வி செய்யப்பட்டு அதிக விமர்சனத்திற்கு உள்ளானார்.

அதன் பிறகு அனைத்தையும் தாங்கிக் கொண்டு தனது விடா முயற்சியினாலும் கடின உழைப்பினாலும் உலகளவில் வளர்ந்து மிக முக்கியமான நடிகராக தனுஷ் விளக்குகிறார்.இவர் நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி,வேலையில்லா பட்டதாரி போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது இதன் மூலம் தான் அடுத்தடுத்து திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் தொடர்ந்து இயக்குனர் மித்ரன் ஜகவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ளார்கள். இவர்களை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஸ் காந்த் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் மேலும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தினை நெட் ஜாயண்ட் மூவிஸ் நிறவனம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ்சாக உள்ளது. முன்னதாக திருச்சிற்றபலம் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த தாய் கிழவி பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் வைரலானது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த பாடலுக்குப் பிறகு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இத்திரைப்படத்திற்காக காத்து வருகிறார்கள் இந்த பாடலை பாடகர் திருமூர்த்தி தனக்கே உரியதான பாணியில் பிளாஸ்டிக் குடத்தில் தாளம் போட்டபடி பாடல்களை பாடுவதும் அது சமூக வலைதளத்தில் வைரலானதும் வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது விக்ரம் படத்த இடம் பெற்றிருந்த பத்து தலை பாடலையும் மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி பாடிய அசைத்தி இருந்தார்.இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது மேலும் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் திருமூர்த்தி நேரில் சந்தித்து பாராட்டினார் ஏஆர் ரகுமான் இசை பள்ளியிலும் திருமூர்த்தியை சேர்த்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தற்பொழுது தனுஷின் தாய்கிழவி பாடலை திருமூர்த்தி தனது பானியில் பாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

NAYANTHARA VIKNESH SHIVAN

நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமண டிரைலரை வெளியிட்ட நெட் ஃபிளிக்ஸ்.! வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்த்துடன் சினிமாவில் கலக்கி வருகிறார் மேலும் தற்பொழுதுள்ள தமிழ் நடிகைகளின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா தான் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

பொதுவாக சினிமாவில் நடிகர் நடிகைகளின் மீது சர்ச்சைகள் எழுவது வழக்கம் அதில் நயன்தாராவின் மீது ஏராளமான சர்ச்சைகள் இருந்தது பல நடிகர்களை காதலித்து வந்த நிலையில் தற்பொழுது இவர் இயக்குனர் விக்னேஷ் இவனை ஏழு வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் இவர்களுடைய திருமணம் சென்னைக்கு அருகே மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. மேலும் இவர்களுடைய திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல் நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரும் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் திருமணம் முடிந்த உடன் கோவில்கள், விருந்து மற்றும் ஹனிமூன் என அங்கும் இங்கும் சுற்றிவிட்டு சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வேலையை பார்த்து வருகிறார்கள். கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி கூட்டணியில் காத்து வாக்குல 2 காதல் திரைப்படம் வெளியானது.

மேலும் தற்பொழுது நயன்தாரா சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இவர்களுடைய திருமண வீடியோவை நெட்லிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைப்பு உரிமை பெற்று உள்ளதாகவும் விரைவில் அந்த வீடியோ நெட்லிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அந்த வகையில் இவர்களுடைய திருமணத்தின் மொத்த செலவும் netflix நிறுவனத்தினுடையதுதான் இதன் மூலம் அவர்கள் சம்பாதித்துக் கொண்டதாகவும் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது இந்நிலையில் சற்று முன்பு இவர்களுடைய திருமண வீடியோ குறித்த ட்ரெய்லர் வீடியோவை நெட் ப்ளீஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஒருவரை பற்றி இன்னொருவர் கூறிய கருத்துக்கள் அதில் உள்ளனர் இதனை அடுத்து விரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ முழு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

raveena-daha

புடவையில் தனது இடுப்பை வளைத்து வளைத்து நடனமாடிய ரவீனா தஹா.! வைரலாகும் வீடியோ..

ஆரம்ப காலகட்டத்தில்,அதாவது திரையுலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு நிறைய நபர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றிய தகவல்கள் எதையும் பகிர மாட்டார்கள் ஆனால் ஒருமுறை திரையுலகில் காலடி எடுத்து வைத்து விட்டால் சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விடுவார்கள்.

நம்மை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், நாம் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க வேண்டும் இருந்தால் மட்டும்தான் மக்கள் மறக்க மாட்டார்கள்,நமக்கென்று தனி ரசிகர்கள் உருவாகுவார்கள் என்ற எண்ணத்துடன் சமூக வலைத்தளங்களில்,திரையுலகில் வந்த பிறகு தங்களைப் பற்றிய செய்திகளை பகிர்வார்கள் மேலும் அவ்வப்போது புகைப்படங்கள், சில நல்ல தருணங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆவார்கள்.

இந்த மாதிரி சமூக வலைதளங்களில் தனக்கென தனி ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் ரவீனா நீண்ட வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் மௌன ராகம் 2 நாடகத்தில் சக்தி என்னும் கதாபாத்திரத்தில் ரவீனா நடித்து வருகிறார், இவரது முகம் பார்ப்பதற்கு குழந்தை போல் இருக்கும், அதற்கு ஏற்றது போல் இந்த கதாபாத்திரமும் இவருக்கு கச்சிதமாக அமைந்திருக்கும்.

இவர் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார், இவ்வாறு எக்கச்சக்கமாக இருக்கும் தனது பாலோவர்ஸ்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்கள் பகிர்வது மற்றும் ரீல்ஸ் செய்வது என அவ்வப்போவது ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

இவ்வாறு எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தரிப்பு கலர் புடவையில் இசை ஒன்றிர்க்கு நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார், அதில் தனது அழகான சிரிப்பை வெளிப்படுத்தி மிக அருமையாக அழகாக நடனம் ஆடி இருப்பார் ரவீனா இதோ அந்த வீடியோ உங்களுக்காக‌.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

sivakarthikeyan

விஜய் டிவி செட்டிக்கு வந்து தொகுப்பாளரை கலாயித்த சிவகார்த்திகேயன்.! வைரலாகும் ப்ரோமோ..

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் முன்னணி நடிகர்களை தங்களது ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக வர வைத்தால் அதன் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையும் மேலும் இவர்களுடைய டிஆர்பியும் எகிரும் என்பதற்காக தொடர்ந்து பல திரை பிரபலங்களை தங்களது நிகழ்ச்சிகளில் பங்கு பெற வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஷோவில் நடிகர் சிவகார்த்திகேயன் கெஸ்ட்டாக கலந்து கொண்டிருக்கிறார்.சிவ கார்த்திகேயன் விஜய் டிவியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிறகு விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்து இவருடைய பேச்சுத் திறமையை நான் தனது நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

இதன் காரணமாக சிவகார்த்திகேயன் தற்பொழுது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக கலக்கி வந்தாலும் விஜய் டிவியில் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்த வகையில் குக் வித் கோமாளி தொடர்ந்து கலந்து கொண்டு வந்த இவர் தற்பொழுது KPY சாம்பியன்ஸ் ஷோவின் பைனலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்பொழுது KPY சாம்பியன்ஸ் புகழ்ச்சியின் இவர் வந்தவுடன் ஜட்ஜ் ஆக இருந்து வரும் அர்ச்சனாவை தான் முதலில் கலாய்த்துள்ளார்.ஒளவையார் காலத்தில் இருந்து ஆங்கராக இருந்து வருகிறார். ராமர் தான் காமெடி செய்யும் பொழுது டயலாக்கை மறந்து விடுவது போல அடிக்கடி இருக்கிறார்.

அது பற்றி பேசிய சிவகார்த்திகேயன் அவர் உண்மையிலேயே மறைகிறாரா இல்லை மறைந்ததையே பெர்பார்மன்ஸ்சாக மாற்றிவிட்டாரா என தெரியல என கேட்கிறார். இவ்வாறு சிவகார்த்திகேயன் என்று கொடுத்தவுடன் அந்த செட்டே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அந்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

tjiruchitrapalam

டெலிவரி பாயாக தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலத்தின் ட்ரெய்லர் இதோ..

தமிழ் சினிமாவின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது ஹாலிவுட், பாலிவுட் என தொடர்ந்து பல மொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்தியா சினிமா அளவில் மிகவும் பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இந்த வகையில் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது. மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன், மாறன் திரைப்படங்கள் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ட்ரெய்லரில் நடிகர் தனுஷ் டெலிவரி பாயாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான பாரதிராஜா தனுஷின் தாத்தாவாகவும், பிரகாஷ்ராஜ் தனுஷிற்கு அப்பாவாகவும் நடித்துள்ளார். மேலும் இவர்களைத் தொடர்ந்து தோழியாக வரும் நித்தியா மேனன் அனைவர் கவனத்தையும் ஈர்க்கிறார்.

இந்த ட்ரெய்லர் 2 நிமிடங்கள் 11 வினாடிகள் ஓடுகிறது மேலும் இந்த ட்ரெய்லர் வெளியான குறைந்த நேரத்தில் அதிகப்படியான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தினை மித்திரன் ஜெகவர் இயக்குகிறார் மேலும் பிரியா பவானி சங்கர்,ராசி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இவர்களைத் தொடர்ந்து அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இந்த திரைப்படத்தின் மூலம் இணைகிறார்கள்.

கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்படையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியே வந்தால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் தொடர்ந்து நடிப்பில் வெளிவரும் அனைத்து தனுஷ் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் இந்த திரைப்படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலத்தின் ட்ரெய்லர்..

movie

போதைப் பொருளுக்கு அடிமையான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட நடிகை.! வைரலாகும் வீடியோ..

பொதுவாக சினிமா என்றாலே நடிகைகள் பலரும் போதைப் பொருளுக்கு அணுமையாக இருந்து வருவது வழக்கமாக இருக்கிறது. மேலும் நடிகைகள் சினிமாவில் பிரபலமடைய தொடங்கி விட்டால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் மேலும் தற்பொழுது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபலமடைந்த ஷில்பா மஞ்சுநாத்.

இத்திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருந்ததால் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதன் மூலம் ஷில்பா மஞ்சுநாத் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இந்த திரைப்படத்திற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மேலும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் வெப் சீரியல் ஒன்றில் நடித்த வருகிறார்.

இவ்வாறு இவர் உண்மையிலேயே போதைப் பொருளிற்கு அடிமையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அதாவது இவர் வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருவதால் அந்த கேரக்டருக்காக இவ்வாறு போதைக்கு அடிமையான பெண்ணாக மாறிவுள்ளார் வெப் சீரியலில் இந்த கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது வீட்டின் கதவை மூடிவிட்டு போதை பொருள் எடுத்துக் கொள்ளும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சர்ச்சையாக ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில் தற்போது தான் அவர் வெப் சீரியலில் நடிப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வெப் சீரியலில் இதற்கு ஜோடியாக நட்டி நராய்டு நடித்து வருகிறார்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் 2018 ஆம் ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த காளி திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு தான் மற்ற திரைப்படங்களின் அளிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு தான் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி,வேதாஸ் பிரபாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ramya-pantiyan

பாவாடை தாவணியில் தேவதை போல் சூரிவுடன் இணைந்து நடித்த இடுப்பழகி ரம்யா பாண்டியன்.! வைரலாகும் வீடியோ..

தொடர்ந்து சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து எந்த திரைப்படம் பெரிதாக பிரபலத்தை தராத காரணத்தினால் சோசியல் மீடியாவில் தனது இடுப்பழகு தெரியும்படி வெளியிட்ட ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஒரே இரவில் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.இந்த போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரீச்சை பெற்றது.

இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்த வகையில் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் பெரிதாக இவருக்கு திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றுக் கொண்ட இவர் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார்.அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த ‘நானே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் சில திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் தற்போது வரையிலும் வெளியாகவில்லை. மேலும் சோசியல் மீடியாவில் நாள்தோறும் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு ரிசைப் பெற்றிருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சி ஒன்று படித்தொட்டி எங்கும் பிரபலமானத இந்நிலையில் நடிகர் சூரியுடன் இணைந்து ரம்யா பாண்டியன் நடித்த வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த வீடியோவில் இருவரும் சம அழகாக நடித்துள்ளதை அடுத்து ரம்யா பாண்டியன் மிக அழகாக இருக்கிறார் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக வேற லெவலில் ரீச்சாகி வருகிறது.