தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் பெங்களூர் சென்றுள்ளார் அது குறித்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த வருடம் அக்டோபர் 29ஆம் தேதி அன்று உயிரிழந்தார்.
நடிகர் புனித் ராஜ்குமார் தொடர்ந்து பலருக்கும் தன்னுடைய உதவிகளை செய்து நல்ல காரியங்களை செய்து வந்தார் எனவே இவரை ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடி வந்தார்கள். அந்த வகையில் கர்நாடக மாநிலத்திற்கு எங்கு சென்றாலும் புனித் ராஜ்குமார் அவர்களின் பேனரை பார்க்க முடியும் மேலும் ஏராளமான ஆட்டோக்கள், டாக்சிகள், பொது இடங்கள் பலவற்றிலும் புனித் ராஜ்குமாரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருக்கும்.
எனவே பலரும் இவரை கொண்டாடி வந்த நிலையில் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க இருக்கிறது. கர்நாடக அரசு எனவே அந்த விழா பெங்களூருவில் இன்று மாலை நடைபெற இருக்கிறது இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்த அழைப்பினை ஏற்று பெங்களூர் தனி விமானத்தில் வந்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் எனவே அந்த விமானத்தில் இறங்கி நடந்து வந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலே தனி தான் என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் கர்நாடக ரத்னா விருது விழாவில் ரஜினிகாந்த் அவர்களை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவர் சுதா மூர்த்தி ஆகியோர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு இந்த விழா இன்று மாலை 4 மணி அளவில் துவங்க இருக்கிறது. தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் புனித் ராஜ்குமார் அவர்களுக்காக தன்னுடைய வேலைகளை ஒதுக்கி விட்டு இங்கு வந்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Superstar #Rajinikanth reached Bangalore for Appu(Puneeth Rajkumar)event ❤️#NTRajiniForAppu #AppuLivesOn pic.twitter.com/ylQ9Qq5SQd
— Balaji Duraisamy (@balajidtweets) November 1, 2022