oviya-arav

நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரவ் திருமணம் பற்றி வாய் திறந்த ஓவியா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.! வைரலாகும் வீடியோ.!

actress oviya said about aarav marriage video: நடிகை ஓவியா ஆரவ்வை காதலித்த விழயம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரோ தற்போது வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். இதனை அடுத்து ஆரவ் திருமணம் சமீபத்தில் நடைபெற்று.

இந்த திருமணத்தில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இருந்தன ஆனால் நடிகை ஓவியா மட்டும் வரவில்லை. ஏன் திருமணத்திற்கு வரவில்லை என்று ஓவியாவிடம் ரசிகர்கள் கேட்டபோது அப்பொழுது கேரளா சென்று விட்டேன் என்று அதற்கு பதிலளித்தார்.

இதனை அடுத்து நடிகை ஓவியாவைப் பார்த்து ரசிகர் ஒருவர் மீண்டும் இது குறித்து கேள்வி கேட்டபோது ஆரவ் திருமண வாழ்க்கை சந்தோசமாக போய்க் கொண்டிருக்கிறது இதில் நான் தலையிட விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

இனிமேல் இந்த கேள்வி என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிலளித்திருந்தார். நடிகை ஓவியா வெளியிட்ட வீடியோ காணொளி இதோ.

விடுயோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே.! ஷிவானி பாலாஜியை பங்கமாய் கலாய்த்த போட்டியாளர்.! வீடியோ உள்ளே

love romantic between shivani, balagi video viral: விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் எதுவாக இருந்தாலும் மிகவும் முகத்துக்கு முன் பேசி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு பிரச்சனயாக இருந்தாலும் உடனே பேசி தீர்வு எடுத்துக் கொள்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் குரூப்பிசம், ஃபேவரிசம் போன்றவை இருந்தால் முகத்துக்கு நேராக கூறிவிடுகின்றனர் கடந்த மூன்று சீசன்களை விட  இந்த சீசனில் ஆட்டம் மிகவும் நேர்மையாக போய்க்கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

இந்த சீசனில் பாலாஜி மற்றும் சிவானி இருவரும் காதலிக்கத் தொடங்கி உள்ளது போன்று தெரியவருகிறது கடந்த 2 தினங்களாக இருவரும் இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் இருவரும் ரொமான்டிக்காக  பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டிலுள்ள ஹவுஸ் மெட்டுகள்  மன்மதராசா, லூசு பெண்ணே போன்ற பாடலை பாடி கலாய்கின்றனர்  அதை கண்டுகொள்ளாமல் இருவரும் ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

அதை பார்த்த ரசிகர்கள் இது கடந்த சீஸனில் இருந்தது போல நடிப்பு காதலா இல்லை உண்மையான காதலா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ராஷ்மிகா மந்தனாவை ஓவர்டேக் செய்யும் வகையில் ஜிம் வீடியோவை வெளியிட்ட கன்னக்குழி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.! வீடியோ உள்ளே

பொதுவாக சினிமாவில் உள்ள நடிகைகள் தங்களது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக அக்கறை காட்டுவார்கள், ஏனென்றால் அவர்களின் உடல் கட்டு கோப்புடன் இருந்தால் மட்டுமே சினிமாவில் நீண்ட காலம் நிலைக்க முடியும்.

ஒரு சில நடிகைகள் சிறிது காலத்திலேயே தொப்பையும் தொந்தியாகவும் மாரி பட வாய்ப்பை இழந்துவிடுவார்கள் அப்படி பல நடிகைகள் சினிமாவை விட்டு ஓடியிருக்கிறார்கள். அந்த வகையில் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதற்காக தனது உடல் எடையை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் பல நடிகைகள் உண்டு அவர்களில் ஸ்ருஷ்டி டாங்கே ஒருவர் ஆவார்.

இவர் 2016 ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஏப்ரல் ஃபுல், டார்லிங், எனக்குள் ஒருவன் கத்துக்குட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார் இந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார், சமீபத்தில்கூட நடிகர் ராஷ்மிகா மந்தனா ஜிம் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஜிம் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

முழுக்க முழுக்க இரட்டை அர்த்தத்தில் வெளியான இரண்டாம் குத்து படத்தின் சிங்கிள் ட்ராக்.! அடப்பாவிகளா அதுக்குன்னு இப்படியா பாடல் எழுதுவீங்க

தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கி வருபவர்களில் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பவரும் ஒருவர், இவர் முதன்முதலில் ஹர ஹர மகாதேவி என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தை மீண்டும் அடல்ட் காமெடி ஜானரில் இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், அது மட்டுமில்லாமல் பல விமர்சனங்கள் எழுந்தாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படத்தை பி சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி வருகிறார், படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் பிரபலமான டேனி  மொட்டை ராஜேந்திரன், ஷாலு ஷம்மு என பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள், அந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது அது மட்டுமில்லாமல் பல பிரபலங்களும் முகம் சுளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து சிங்கிள் ட்ராக் ஒன்று வெளியாகி மேலும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் பாடல் முழுவதும் இரட்டை அர்த்தத்தில் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதோ அந்த பாடல்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை போல் பாம்பை கையால் பிடித்த சிம்பு.! வைரலாகும் வீடியோ

actor simbu snake catching video viral: நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் நடிகர் சிம்பு இதுவரை நடித்திராத கிராமத்து கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துவருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிம்புவுக்கு தங்கையாக நடிகை நந்திதா ஸ்வேதா அவர்கள் நடித்து வருகிறார் என்பது தெரியவருகிறது.

சிம்பு இந்தத் திரைப்படத்திற்காக தனது லுக்கை மாற்றிக் கொண்டு முழுவதுமாக ஆளே அடையாளம் தெரியாமல் மிகவும் ஹேண்ட்சம்மாக உள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கியமான காட்சி ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது படையப்பா படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் பாம்பு புற்றிலிருந்து பாம்பை எடுப்பது போல சிம்புவும் ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பாம்பை எடுத்து ஒரு சாக்குப்பையில் போடுகிறார். தற்போது அந்த வீடியோ வெளியாகி பரவலாகி வருகிறது.

வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிம்பு மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார் என அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.

முதன்முறையாக தயாநிதி அழகிரிக்காக இணைந்துள்ள விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன்.! என்ன ஒரு ஒற்றுமை என்ன உச்சுக் கொட்டும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தயாநிதி அழகிரி பல திரைப்படங்களை தயாரித்துள்ளார், அதிலும் அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படத்தை தயாரித்து வெற்றி கண்டவர், இந்த நிலையில் அழகிரி முதன் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

தயாநிதி அழகிரி அவர்கள் முதன்முறையாக மாஸ்க் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்,

இயக்குனராக அவதாரம் எடுத்த தயாநிதி அழகிரி அவர்களுக்கு சினிமா பிரபலங்களான அனிருத், ஹரிஷ் கல்யாண், சாந்தனு, நிதின் சத்யா, சூரி, என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

mask

இந்த நிலையில் அழகிரி இயக்கியுள்ள குறும் படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த டீசரை முதன்முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சதுபதி இணைந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்கள் என கூறப்பட்டது.

இந்த குறும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் அழகிரியின் சகோதரருமான அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டிரந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ டீசர்

mask

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலிருந்து “ஆடி குத்து” வீடியோ பாடல்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல், ரஜினியின் அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஆர் ஜே பாலாஜி காமெடியில் கலக்கி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலிருந்து ஆடி குத்து என்ற வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் அர்ச்சனாவை அலறவிட வந்துள்ளார் சுசித்ரா.! மியா மியா பூனை பாடலுடன் இதோ அதிகாரபூர்வ ப்ரொமோ

singer suchitra biggboss wild card entry video: பிக்பாஸில் இன்று வெளிவந்த ப்ரமோவில் பாடகி சுசித்ரா அவர்கள் நமது வெப்சைட்டில் ஏற்கனவே சொன்னது போல உள்ளே வருகிறார். மேலும் இன்று பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரப் போகிறார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு பாடகி உள்ளே வருவது வீட்டிற்கு ஒரு கலகலப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்த ப்ரமோவில் பாடகி சுசித்ரா உள்ளே வரும்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்கிறார்கள்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவுக்கு எதிராக ஆரீ தலைமையில் குரூப் ஃபார்ம் ஆகி வருகிறது. இந்த நிலையில் பாடகி சுசித்ரா வருவது அர்ச்சனாவின் முகத்தில் ஒரு பயம் தெரிகிறது.

ஏனென்றால் இவர் 28 நாட்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருந்து வீட்டுக்குள் என்ன நடந்தது என்பதை சரியாக கவனித்து வந்துள்ளார். பாடகி சுசித்ரா எந்த குரூப்பில் இணையபோகிறார் என்பதை பொறத்திருந்து தான் பார்க்க முடியும்.

இதோ அந்த வீடியோ.

மெர்சல் பாடலுக்கு ரொமான்டிக் நடனமாடி பிக்பாஸ் போட்டியாளர்களையே ஆச்சரியப்பட வைத்த பாலாஜி, ஷிவானி!! வைரலாகும் வீடியோ.

shivani narayanan, balaji murugadass romantic video: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து  சுவாரஸ்யத்திற்கு குறை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு டாஸ்க்  கொடுத்து போட்டியாளர்களிடையே சண்டை, சச்சரவு, நட்பு, காதல், பாசம் என அனைத்தையும்  தூண்டி விட்டு கொண்டிருக்கிறார் பிக் பாஸ்.

அந்த வகையில் நேற்று பிருஸ்மா அழகிய ஜோடி என்ற போட்டியில் போட்டியாளர்கள் ஜோடியாக பிரிந்து கேட்வாக் செய்தபடி நடனமாடி வரவேண்டுமென கூறியிருந்தார்.

இதற்காக போட்டியாளர்கள் 2 நபர்களாக பிரிந்துகொண்டனர். அந்த வகையில் ஷிவானி நாராயணனும் பாலாஜி முருகதாசும் ஜோடியாக பிரிந்து கேட் வாக் செய்தபடி மாச்சோ என்னாச்சோ என்ற பாடலுக்கு மிக ரொமான்டிக்காக இருவரும் நடனமாடி அங்குள்ள போட்டியாளர்களையே ஆச்சரியமடைய செய்தனர்.

இவர்கள் இருவரின் ரொமான்ஸ்சை பார்த்ததும் போட்டியாளர்கள் மட்டும் ரசிகர்களின் முகங்களில் பயங்கர ஷாக் என்றே கூறலாம்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷிவானி பாலாஜிக்கிடையே காதல் வந்துவிட்டதோ என வருத்தத்தில் உள்ளனர்.

பிரபல நடிகையின் திருமணத்தில் நடனமாடிய ரம்யா நம்பீசன், பாவனா, சரண்யா மோகன் !! வைரலாகும் வீடியோ.

actress ramya nambesan , bhavana dancing in actress marriage video : தமிழில் நாகராஜ சோழன் எம்எல்ஏ, மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மிருதுளா முரளி. இதற்கு பின்னர் மலையாளத்தில் ரெட் சில்லி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இப்படிப் பல திரைப்படங்களில் நடித்த இவர் உதவி இயக்குனரான நிதின் விஜய் என்பவரை சில காலங்களாக காதலித்துக் கொண்டிருந்தார்.

இவர்களில் இரண்டு குடும்பமும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் ஏப்ரல் மாதமே நடக்க இருந்தது ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிப்போனது.

அதனைத் தொடர்ந்து கடந்த 29-ஆம் தேதி முக்கியமான உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையில் திருமணம் நடந்துமுடிந்தது. இந்த திருமணத்திற்க்கு நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகுல் சுப்பிரமணியம் போன்ற பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமணத்தில்  நடிகை பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன்,  மணப்பெண் மற்றும் மணமகன் என அனைவரும் நடனம் ஆடினார். அந்த டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/rXCDcid5OAk

அப்பாவை மிஞ்சிய இயக்குனர் வெங்கட்பிரபு மகள்!! வைரலாகும் வீடியோ.

venghat prabhu daughter sing a song video viral: பிரபல இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபுவின் மகள் சிவானி அவர்கள் தற்போது இசைப்பள்ளியில் முதலாமாணடு மாணவியாக பயின்று வருகிறார்.மேலும் இவர் கங்கை அமரன் மற்றும் இளையராஜா அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இசை மேல் இவருக்கு உள்ள ஆர்வத்தால் ஐந்து வயதிலேயே தாலி என்ற ஆல்பத்தில் பாடி தான் ஒரு இசை குடும்பத்தை சார்ந்தவர் என நிரூபித்தார்.

இசைப் பள்ளியில் சேர்ந்த இவர் தனது சக மாணவர்களுடன் இணைந்து ஒரு சில பாடல்களை கம்போஸ் செய்து பாடியுள்ளார்.

மேலும் உலகப் புகழ்பெற்ற லசாரஸ் பாடல்களை தங்களது பாணியில் சிவானி மற்றும் அவரது நண்பர்கள் இசையமைத்து பாடிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த இசை ரசிகர்கள் அவரைப் பாராட்டி இந்த பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

வீடியோ இதோ.

Exit mobile version