nivetha-pethuraj

உடற் பயிற்சி என்ற பெயரில் ரசிகர்களை வியர்த்து விறுவிறுக்க வைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

nivetha pethuraj latest workout image:வெளிநாட்டுக்கு சென்று முறையான மாடலிங் படிப்பை முடித்து வந்தவர்தான் நடிகை நிவேதா பெத்துராஜ் இவர் ஒருநாள் கொடுத்த என்ற திரைப்படத்தின் மூலமாக திரை உலகில் முதன்முதலாக முகம் காட்ட ஆரம்பித்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2011ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட அழகிகள் போட்டியில் கலந்துகொண்டு மிஸ் இந்தியா எனும் பட்டத்தை வென்றார்.  மேலும் சமீபத்தில் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க முன்வந்துள்ளார்.

அந்த வகையில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வைகுண்ட புரம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார். தற்சமயம் நிவேதா பெத்துராஜ்க்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.

பொதுவாக நடிகைகள் மிக அழகாக இருப்பது மட்டுமல்லாமல் உடல் பாவனை அதற்கு தகுந்தார்போல் இருந்தால்தான் சினிமாவில் நீண்ட நாள் தங்கலாம் என்பதை புரிந்து கொண்டு தற்சமயம் தன்னுடைய உடல் எடை பருமன் மிகக் கணிசமாக வைத்துக்கொள்ளும் நடிகை தான் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் நமது நடிகை மிக தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் அந்த அரிய காட்சியை சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

https://youtu.be/97k9O5nsjss

katteri

யாமிருக்க பயமேன் திரைப்படத்தின் மிரட்டல் இயக்குனரின் அடுத்த படைப்பு. வெளியானது காட்டேரி திரைப்படத்தின் டிரைலர்

இயக்குனர் டிகே இயக்கத்தில் வெளியான யாமிருக்க பயமேன் திரைப்படத்தை தொடர்ந்து கவலை வேண்டாம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இதனை தொடர்ந்து தற்போது காட்டேரி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாதான் தயாரித்துள்ளார்,  படத்தில் வைபவ் ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா,  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா கால கட்டத்தில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போனது. இந்தநிலையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காட்டேரி திரையரங்குகளில் வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தநிலையில் காட்டேரி திரைப்படத்திலிருந்து இரண்டாவது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது இந்த ட்ரைலர் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது கண்டிப்பாக கதையை கணிக்க முடியாத அளவிற்கு வெளியாகியுள்ளது,  யாமிருக்க பயமேன் திரைப்படத்தின் இயக்குனர் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படமும் வெற்றியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் கிறிஸ்மஸ் நல்ல ட்ரீட்டாக அமையும் என டிரைலரை பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள். இதோ ட்ரைலர்

படபிடிப்பு தளத்தில் நயன்தாராவை கோவப்படுத்தும் வகையில் பிரபல நடிகையுடன் சிரித்து பேசியா விக்னேஷ் சிவன்..! வைரலாகும் வீடியோ..!

samantha and vignesh shivan latest news: சுமார் மூன்று வருடங்களாக நயன்தாராவுடன் நேரத்தைப் போக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒருவழியாக மறுபடியும் திரைப்படம் இயக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் மேலும் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவர்களும் நடிக்க உள்ளார்கள்.

ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கி மாபெரும் ஹிட்டடித்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை எதிர்பார்ப்பது மிகவும் அதிகரித்துவிட்டது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இளமையான தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்தில் முதலில் சமந்தா நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

ஆனால் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டதை வீடியோவின் மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா விக்னேஷ் சிவனுடன் கிண்டலாக பேசும் அந்த அறியா வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://youtu.be/oeQW1P24gYc

rai-lakshmi

சென்சார் இல்லை என்பதற்காக லிப் லாக் படுக்கை அறை காட்சி என பின்னி பெடலெடுக்கும் ராய் லட்சுமி.! வைரலாகும் வீடியோ

நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர்.  சொல்லப்போனால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தமிழில் முதன்முதலாக கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார் மீண்டும் தமிழில் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு தமிழில் சரியான வாய்ப்பு அமையாததால் பாலிவுட் பக்கம் சென்றார் பாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடை முழுவதும் குறைத்து ஜூலி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்,  ஜூலி 2 திரைப்படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்து வந்த ராய் லட்சுமிக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் அமையவில்லை.

https://youtu.be/cq9oAcQcgBM

இந்த நிலையில் நடிகை ராய் லட்சுமி அவர்களின் உதட்டை சமீபத்தில் அழகாக்கிறேன் என்ற பெயரில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என சர்ச்சைகள் வெடித்தது.  இந்த நிலையில் தற்போது இவர் சின்ரெல்லா,  ஆனந்த பைரவி,  ஜான்சி ஐபிஎல்,  ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பாய்சன் 2 என்ற வெப்சீரிஸ்ல்  நடித்து வருகிறார் அந்த வெப் சீரியல் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டுமில்லாமல்  அரைநிர்வாண காட்சி படுக்கை அறை காட்சி என அனைத்திலும் பின்னி பெடல் எடுக்கிறார் ராய்லட்சுமி.

vanitha

வேலவன் ஸ்டோரில் வித விதமான புடவையை பார்த்து அசந்துபோன வனிதா..! வைரலாகும் வீடியோ..!

vanitha shopping in velavan store : தங்கவேல் மற்றும் வேலவன் ஆகிய இருவராலும் இணைந்து தொடங்கப் பட்ட ஸ்டோர் தான் வேலவன் ஸ்டோர்.  இந்த ஸ்டோர் ஆனது 1998-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது.

மேலும் இந்த ஸ்டோரில் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் ஆடை அணிகலன்கள் என அனைத்து வகையான பொருட்களும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலமாக தூத்துக்குடி மக்கள் இடையே மிகவும் பிரபலமாய் விட்டார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த ஸ்டோர் ஆனது சென்னையில் டி நகர் பகுதியில் பிரமாண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் திறந்து உள்ளார்கள்.  அதுமட்டுமல்லாமல் சென்னையில் எங்கும் கிடைக்காத அளவிற்கு மிக குறைந்த விலையில் ஆடை மற்றும் உபயோக பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்களாம்.

இதற்கு முக்கிய காரணமே அவர்கள் வாங்கும் அனைத்து பொருட்களுமே உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்குவதன் மூலமாக மிக குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் பல்வேறு சிறப்பு சலுகைகளையும் செய்து வருகிறார்களாம்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகை வனிதாவும் இந்த ஸ்டோருக்கு ஷாப்பிங் செய்ய செய்துள்ளாராம் அங்கு சென்றவுடன் அங்கு உள்ள அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆடைகள் அனைத்தையும் பார்த்துவிட்டு அசந்து போய் விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் புடவை செக்ஷனில் சென்று புடவை பார்த்துள்ளாராம் அங்கு பார்த்த அனைத்துப் புடவையுமே மிகவும் பிரம்மாண்டமாக இருப்பது மட்டுமல்லாமல் மிக குறைந்த விலையில் இருப்பதன் காரணமாக பிரமித்துப் போய் விட்டாராம்.

இவ்வாறு அவர் ஷாப்பிங் செய்த வீடியோவானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

meera-mithun

மிக மோசமான புகைப்படத்துடன் வெளிவந்த மீரமிதுனின் பயோபிக் திரைபடத்தின் டீசர்..! இது வேறமாதிரி படமா இருக்கும் போல..!

meera mithun latest movie teaser: சமூக வலைத்தளத்தில் தற்போது சர்ச்சைகூறிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மீரா மிதுன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் இடையே பெரும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார்.

மேலும் 2016ஆம் ஆண்டு பல இளம் நடிகைகளை மாடல் அழகிகளாக மாற்றுவதாக கூறி மோசடி செய்து பல்வேறு சிக்கலில் சிக்கிக் கொண்டார்.இதன் காரணமாக மீரா மிதுன் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

என்னதான் கல்லடி பட்டாலும் திருந்துவதாக இல்லை அந்த வகையில் சமூக வலைதள பக்கத்தில் பிரபலமாக இருந்து வரும் நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரையும் வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் நமது நாட்டின் பிரதமர் மற்றும் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் விஜய்-சூர்யா திரிஷா என அனைவரையும் வாய்க்கு வந்ததை சொல்லி திட்டியதாக மட்டுமல்லாமல் அவர்களை அவமானப்படுத்தி உள்ளார்.

என்னதான் இவ்வளவு கேவலமான வேலை செய்தாலும் அவ்வபோது தன்னுடைய கிளாமர் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் மீராமிதுன் எடுத்த போட்டோ ஷூட் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏனெனில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப் போகிறாராம்.  அதற்கான போஸ்டர் தான் இது என தெரிவித்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

varalakshmi

சண்டைக்காட்சியில் சும்மா கட்டம் கட்டி கலக்கும் நடிகை வரலட்சுமி..! சரத்குமார் மகள் என்றால் சும்மாவா.?

actress varalakshmi latest video: லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.

நடிகை வரலட்சுமி முதலில் நடித்த திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்த அதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமானது மட்டுமல்லாமல் சமீபத்தில் அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகளையும் பெற  ஆரம்பித்துவிட்டார்.

என்னதான் தனது தந்தை மூலமாக சினிமாவிற்குள் முடிந்தாலும் தனது அயராத உழைப்பை திரைப்படத்தில் காட்டிக்கொண்டு வரும் நடிகை வரலட்சுமி எப்பொழுதும் தான் நடிக்கும் எந்த ஒரு காட்சிக்கும் டூப் போட்டதே கிடையாதாம்.

அந்த வகையில் சமீபத்தில் தான் நடித்த திரைப்படம் ஒன்றில் இடம்பெற்றிருந்த சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் மொத்த சீனிலும் அவரே இறங்கி நடித்த நடித்த வீடியோவானது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இந்த காட்சியானது வரலட்சுமி நடித்துக்கொண்டிருக்கும் சேசிங் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிதான். மேலும் இவர் நடிக்கும் இந்த திரைப்படமானது தமிழ் மொழி மட்டுமல்லாமல்  மேலும் 2 மொழிகளில் வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

என்ன தலைவா படத்தில் நடிகை வரலட்சுமி ஒரு போலீஸ் ஆபிசராக நடித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பும் எதிரி விட்டது.

cithra

இணையதளத்தில் வைரலாகும் விஜே சித்ராவின் காமெடி வீடியோ.! இப்படி இருந்தவரை இப்பொழுது இல்லையே என கண்கலங்கும் ரசிகர்கள்….

Vj Chitra’s comedy video goes viral: வெள்ளித்திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி தற்போது பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தவர் சித்ரா. இவர் ஒரு சில தினங்கள் முன்பு பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்புக்காக பைவ் ஸ்டார் ஹோட்டலில் தனது கணவருடன் தங்கி இருந்தார் திடீரென்று கணவரை அனுப்பிவிட்டு நான் குளிக்க போகிறேன் என்று சொன்னபின் வெகுநேரமாகியும் கதவு திறக்காத சித்ரா மாற்றி சாவியுடன் திறந்து பார்த்தால் சடலமாக தூக்கில் தொங்கினார்.

மேலும் இவரது இறப்பு தாங்கமுடியாமல் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பலரும் இவருக்காக தன்னுடன் இருந்த புகைப்படம் வீடியோக்கள் போன்றதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மனதை ஆறுதல் படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ரசிகர்களும் இவரது வீடியோக்களை வெளியிட்டு சோகத்தை காட்டி வருகிறார்கள்.

சித்ரா இறுதியாக செய்த வீடியோ காணொளி இவரது ரசிகர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் அதாவது நாயிடம் வெறுப்பேற்றிய காட்சி மற்றும் பணிசருக்களில் பயணித்தது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க இல்லாம பொய்ட்டிங்களே சித்ரா என்று கூறிவருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்கள்.

https://youtu.be/7rLD_VV0iTU

vijay

தளபதி 65 வது படத்தை பற்றி ட்வீட் போட்ட சிவகார்த்திகேயன்!! என்ன பகிர்ந்துள்ளார் தெரியுமா? வைரலாகும் வீடியோ..

actor sivakarthikeyan tweet about thalapathy 65 ! video viral: வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் இளையதளபதி விஜய்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட்டது. மேலும் அந்த இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தளபதி 65 வது படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்பது சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

மேலும் நேற்று அதிகாரப்பூர்வமாக நெல்சன் தான் தளபதி 65 ஆவது திரைப்படத்தை இயக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது.

இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பே நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா வும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இதனை அடுத்து வளர்ந்துவரும் இயக்குனருக்கு தளபதி வாய்ப்பு கொடுத்துள்ளதால் தளபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதிக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

இதோ அவர் தெரிவித்த நன்றி.

vijay

ரக ரகமான துப்பாக்கிகளுடன் த்ரில்லிங்காக வெளிவந்த தளபதி 65 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..!

thalapathi 65 update: திரையுலகில் தற்போது பல திரைப்படங்களைத் தயாரித்து சாதனை படைத்த தயாரிப்பு நிறுவனம்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.  இவர்கள் இன்று மிக பிரம்மாண்டமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

தற்சமயம் மிக அதிகமாக திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனமாக சன் பிக்சர் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.  இந்நிலையில் சன் பிக்சர் நிறுவனமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய் சூர்யா தனுஷ் என அனைவருடைய திரைப் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெளிவந்த அறிவிப்பானது எந்த முன்னணி நடிகரின் திரைப்பட அறிவிப்பு என பலரும் குழம்பி போய் உள்ளார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் தளபதி விஜயின் திரை படத்தின் அறிவிப்பு தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதாவது தளபதி 65 வது ஒரு திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போகிறது மற்றும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் இசைக்குத் தாளம் போட அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர் நிறுவனமானது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

இதுவரை யாரும் சிந்தித்துக் கூடப் பார்க்காத அளவிற்கு இந்த திரைப்படத்தின் அறிவிப்பு மிக பிரம்மாண்டமாக மீடியாக்களில் ஒளிபரப்பாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் கலாநிதி மாறன் உடன் நடந்து செல்வது போன்றும் பிறகு இயக்குனர் நெல்சன் அவர்களை அறிமுகம் செய்யுமாறு வீடியோவில் உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஆனது வெடிகுண்டு துப்பாக்கி என பார்ப்பவர்களை மிரட்டும் அளவிற்கு ஹாலிவுட் பட ரேன்ஜிக்கு இருப்பதாக பலரும் வியந்து போனது மட்டுமல்லாமல் தற்சமயம் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

sakshi-agarwal

கண்டாங்கி புடவையில் இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு நடனமாடிய சாக்ஷி அகர்வால்.! வைரலாகும் வீடியோ.

சாக்ஷி அகர்வால் இவர் நடிகை மற்றும் வடிவழகியாக பணிபுரிந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் ராஜா ராணி,  இந்த திரைப்படத்தில் ஆர்யா,  ஜெய், நயன்தாரா,  நஸ்ரியா நசீம்,  சத்யராஜ்,  சந்தானம், சத்யன், மனோபாலா,  போன்ற பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் இணைந்து நடித்த திரைப்படம் ஆகும்.  இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானர் சாக்ஷி அகர்வால்.

அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா,  என்ற திரைப்படத்திலும் தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம்,  என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இருப்பினும் இவருக்கு முன்னணி நடிகையான அதிர்ஷ்டம் கிடைக்க வில்லை, இந்நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியூட்டும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஒரு கிராமத்தில் கிராமத்து பெண் போல் புடவை அணிந்து ” இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி “என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோவையும் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

sakshi-agarwal
sakshi-agarwal
sakshi-agarwal
sakshi-agarwal

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அதுமட்டுமல்லாமல் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்த பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.