அந்த படத்தில் அஜித்தை நடிக்க வையுங்கள் – 15 வருடங்களுக்கு முன்பே சிபாரிசு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

0
rajini and ajith
rajini and ajith

சினிமா உலகில்  ஒரு படம் ஹிட் அடித்து விட்டால் அந்தப் படத்தை உடனே ரீமேக் செய்வது வழக்கம்.  அந்த வகையில் அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம். தமிழில் பில்லா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

1980 ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான பில்லா படம் வெளிவந்து எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ரஜினியின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இப்படத்தை பல வருடம் கழித்து 2007 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன்  ரீமேக் செய்ய ஆசைப்பட்டு உள்ளார். இதற்கான அனுமதி பெற ரஜினியை சந்தித்தது உள்ளது படக்குழு.

ரஜினி யார் பில்லா ரீமேக் படத்தில் நடிக்கப்போகிறார் என கேட்க அப்படக்குழு வேறு நடிகரை செலவு செய்யாமல் இருந்து வந்துள்ளது உடனே ரஜினி பில்லா படத்தில் இப்பொழுது அஜீத் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ரஜினி சிபாரிசு பண்ண உடனே படக்குழு அஜித்தை சந்தித்து கதையை கூறி கமீட்டாக்கியது.

ரஜினி நடித்த பில்லா படத்தின் கதை அப்படியே இதில் இருந்தாலும் திரைக்கதை சற்று மாற்றி அஜித்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்து படத்தை எடுத்தது படத்தில் அஜித்தை செம்ம ஸ்டைலிஷாக  காட்டியிருந்தார் படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அஜித்தின் சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக பில்லா படம்  அமைந்தது.

ரஜினி சொன்னது போல பில்லா படத்தில் அஜித் அப்பொழுது நடித்ததால் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியது படக்குழு கடைசியில் ரஜினி சொன்னது போலவே அமைந்து விட்டது எனக் கூறிய சந்தோஷப்பட்டது.