முச்சி திணறலால் துடிதுடித்த விஜயகாந்த்.. முதன்முறையாக வாய் திறந்த பிரமேலதா.? டிசம்பர் 28 கேப்டனின் கடைசி நிமிடம் என்ன ஆனது தெரியுமா,.?

கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில்  இவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் என வந்த வண்ணமே உள்ளனர்.

கேப்டன் விஜயகாந்த் கருப்பு எம்ஜிஆர் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுவார். அதற்குக் காரணம் அனைவருக்கும் சமமான உணவு வழங்குவது மற்றவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்வது போன்ற பண்பினை கொண்டவர்.

அதுமட்டுமல்லாமல் படத்தில் இருப்பது போலவே தனது வாழ்நாளிலும் நற்பண்புகள் அனைத்தையும் கொண்டு வாழ்ந்தவர். பேரளவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாகவே வாழ்ந்தார். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

இவர் நடித்த திரைப்படங்களில்  ஒன்றில் கூட இவர் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்க மாட்டார். அதற்குக் காரணம்  படத்தில் கூட தான் நெகட்டிவ் ஆக இருக்க கூடாது என்ற நோக்கத்தில் தான். இந்த நிலையில் இவர் பற்றி பல திறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் இவரின் நற்குணங்களை பற்றி பேட்டி அளித்து வருகின்றனர் .

கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியதாவது. என் கனவு 2014 ஆம் ஆண்டு முதல் உடல்நல குறைவால் பலமுறை உள்நாடு முதல் வெளிநாடு வரை பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ஆனால் இந்த முறை மருத்துவமனையில் அனுமதித்த போது  கொரோனா தொற்று இருப்பதை கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்தோம். மேலும் திடீரென 28ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.. அப்போது நான் கேப்டன் கையை பிடித்து ஒன்றுமில்லை விரைவில் வீட்டுக்கு சென்று விடுவோம் என கூறினேன். அவரால் நான் பேசியதை கேட்க முடிந்ததே தவிர சுவாசிக்க முடியவில்லை .

உடனே மருத்துவர்கள் இந்த முறை உயிர் பிழைப்பது கஷ்டம் நீங்கள் அனைவருக்கும் சொல்லிவிடுங்கள் என கூறினர். மேலும் அவர்கள் சொன்னது போலவே அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அன்று இதுதான் நடந்தது என முதல் முறையாக பிரேமலதா அவர்கள் கூறியுள்ளார்.