நைட்டு 2 மணிக்கு நடு ரோட்டில் வேகமாக ஓடிய கேப்டன் விஜயகாந்த்.. திக் திக் நிமிடம்

கேப்டன் என்றாலே நாம் நினைவிற்கு வரும் முதல் பெயர் விஜயகாந்த் தான். இவர் ஆரம்பத்தில் அரிசி ஆலை ஒன்றை நடத்தி வந்தார் பின் தீராத சினிமா காதலால் சென்னை வந்த அவர் ஆரம்பத்தில் வாய்ப்பு கேட்டு அலைந்த இவர் 1980 ல் “தூரத்து இடி முழக்கம்” என்ற படத்தில் நடித்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அதன்பிறகு இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் உடன் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் ஒரு அதிரடி நாயகனாக தன்னை மாற்றிக் கொண்டார் அதன் பிறகு எஸ். ஏ. சந்திரசேகருக்கும், விஜயகாந்துக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட தொடர்ந்து அவருடன் பல்வேறு படங்கள் பண்ணினார்.

அப்படி ஒரு தடவை பெரியண்ணா என்ற படத்தில் இணைந்து இருவரும் பணியாற்றி வந்தனர் சிவகுமாரின் மகன் சூர்யா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இதுபோன்ற அப்பவே பல இளம் நடிகர்களை வளர்த்து விட்டார். அதேசமயம் நிஜத்தில் ஒரு பயப்படாத தைரியமான மனிதர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு எடுத்துக்காட்டாக இந்த விஷயத்தை கூறலாம்..

விஜயகாந்த் ஒருநாள் இரவு தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவு 2 மணிக்கு தனது காரில் சென்னை தீ நகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மர்ம நபர்  கையில் கத்தியை வைத்துக்கொண்டு ஒருவரை துரத்திக் கொண்டிருந்தார் இதை பார்த்த விஜயகாந்த் உடனடியாக காரை நிறுத்திவிட்டு..

ஓடிப்போய் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து பக்கத்தில் இருந்த போலீஸ்காரரிடம் ஒப்படைத்து உள்ளார்.  அந்த மர்ம நபர் கையில் கத்தியை வைத்திருந்தாலும் பயப்படாமல் அவரை பிடித்து இழுத்து வந்து போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜயின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் வெளிப்படையாக கூறி உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment