தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. தமிழ்சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆர்க்கு அடுத்ததாக தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் நடித்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக உருமாற அவரது ரசிகர்கள் தான் காரணம்.சமிபத்தில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு விருந்து படைத்தார்.இப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக உருவாகியது. இதனை தொடர்ந்து அவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்பொழுது இந்தியாவிலும் பரவி வருவதால் அதனை தடுக்கும் விதமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனவை எதிர்த்து போராடி வரும் இந்தியர்களின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வரை மின் விளக்கை அணைத்துவிட்டு அல்லது டார்ச்லைட் போன்ற விளக்குகளை ஏற்றுவோம் என மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் இந்தியாவை ஒளிர வைத்துள்ளனர்.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் அவர்கள் வீட்டின் முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏற்றி வெளிப்படுத்தினார். அத்தகைய புகைப்படம் சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.