விஜயகாந்தின் பல திரைப்படங்களை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியுள்ளார். அந்த வகையில் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கினார். அதிலிருந்து சந்திரசேகர் அவர்களுக்கு விஜயகாந்த் நன்றியுடன் இருந்தார். அதேபோல் சந்திரசேகர் தன் மகன் விஜயை ஹீரோவாக்கி பல திரைப்படங்களை எடுத்தார் அதற்கு முழு ஆதரவும் விஜயகாந்த் கொடுத்தார்.
அதேபோல் விஜய்யின் கேரியரில் விஜயகாந்த் மிக முக்கிய பங்கு வகித்தார் அந்த வகையில் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்து சம்பளமே வேண்டாம் என கூறினார் விஜயகாந்த். இதனை பல பேட்டிகளில் விஜய் அவர்கள் கூறியுள்ளார்.
ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த் சம்பளம் வேண்டாம் எனக் கூறியது நினைத்து நெகிழ்ந்தார் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பத்திரத்தை விஜயகாந்த்திடம் தராமல் பிரேமலதாவிடம் எஸ் ஏ சந்திரசேகர் கொடுத்துள்ளார். ஆனால் பிரேமலதா தன்னுடைய கணவரிடம் இருந்து எதையும் மறைக்காமல் விஜயகாந்திருக்கு தெரிவித்தார்.
உடனே விஜயகாந்த் காரை எடுத்துக் கொண்டு நேராக எஸ்.ஏ சந்திரசேகர் இடம் சென்று நீங்க போய் எனக்கு பணம் கொடுக்கலாமா ஏன் இப்படி செய்தீர்கள் என மிகவும் கோபமாக பேசினாராம் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே கோபமாக பேச முடியும் கோபத்தை வெளிப்படுத்த முடியும்.
அந்தக் கோபத்தை புரிந்து கொண்ட எஸ்.ஏ சந்திரசேகர் நீ எனக்கு உதவி செய்தாய் நான் நன்றாக சம்பாதித்தேன் தற்பொழுது உனக்கு திரும்பி செய்வது என்னுடைய கடமை எனக் கூறி விஜயகாந்தை சமாதானப்படுத்தி அனுப்பினாராம்.