என்ன பண்றதுன்னு யோசிக்கிறதவிட என்ன பண்ணலாம்னு யோசி.! விஜய் சேதுபதி வெளியிட்ட கால் டாக்ஸி ட்ரைலர்.

call-taxi
call-taxi

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக புது முகங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன, அந்த வகையில் சந்தோஷ், சரவணன், அஷ்வின், நான் கடவுள் மொட்டை ராஜேந்திரன், மதன்பாப் ஆகியோரும் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கால் டாக்ஸி.

இந்த திரைப்படத்தை பா பாண்டியன் தான் இயக்கியுள்ளார். திரைப்படத்திற்கு பாணன் இசையமைத்துள்ளார் படத்தை கேடி காம்பினேஷ புரோடக்சன் தயாரித்துள்ளது.

அந்தத் திரைப்படத்தில் கால் டாக்சி டிரைவர் ஒருவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு காரை கடத்தி சென்று விடுகிறார்கள் அவர்கள் யார் அவர்கள் எதற்காக கொலை செய்கிறார்கள் என்பதை வெளிக் கொண்டு வருவதே இந்த திரைப்படம்.

திரில்லர் கலந்த அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

இதோ அந்த ட்ரெய்லர்.