ஆள் உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட அஜித், விஜயின் கேக் சிலை.. புகைப்படத்தை பார்த்து கொண்டாடும் தல, தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் திரையுலகில் பல தடவை மோதியுள்ளனர் அப்படித் தான் கடைசியாக பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களும் நேருக்கு நேர் மோதின இரண்டு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் படும் பிஸியாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் தோல்வியை காணாத இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறது.

மறுபக்கம் நடிகர் அஜித் இளம் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக உள்ளார். இந்த இரண்டு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது. இரண்டு படங்களும் தீபாவளிக்கு மோதும் என சொல்லப்படுகிறது. இப்படி திரையுலகில் படங்களின் மூலம் மோதிக்கொண்டாலும் வெளி உலகில் நல்ல நண்பர்களாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதை புரிந்து கொண்ட அஜித் விஜய் ரசிகர்கள் பேனர், கட்டவுட் என வைத்து  அசத்துகின்றனர். அதுபோலவே தான் தற்பொழுது ஒரு  சூப்பரான சம்பவத்தையும் செய்துள்ளனர். அதாவது கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் கேக் திருவிழா ஒன்றை பெரிய அளவில் நடத்தி உள்ளனர் இதில் பலரும் தனது கேக் வடிவமைப்பு திறமையை வெளிக்காட்டினார்.

அதில் ஒரு குழுவினர் அஜித் மற்றும் விஜய் இணைந்து இருப்பது போல் ஆள் உயரத்திற்கு ஒரு கேக்கை தயாரித்து உள்ளனர். அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் பெரிய அளவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது இதை பார்த்த அஜித் விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு லைக், கமெண்டுகளை கொண்டாடி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment