ஷிவானி நாராயணன் பிறந்தநாளுக்கு காமன் டிபியை வெளியிட்ட ரம்யா பாண்டியனின் சகோதரர்.!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபலமடைந்த பலருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினாலும் திறமையிருந்தும் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இப்படி பலருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன் .

இதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் சீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பிரபலமடைந்தார். அதன்பிறகு தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்

இவ்வாறு இவர் பிரபலமடைந்திருந்தாலும் வெள்ளி திரையில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை .அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  பிரபலம் அடைந்தார். இதன் மூலம் இவருக்கு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று ஷிவானி நாராயணன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் காமன் டிபி ஒன்றை உருவாக்கிய வைரலாகி வந்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியனின் தம்பியான பரசு பாண்டியனும் காமன் டிபி ஒன்றை உருவாக்கி அதில் ஹாப்பி பர்த்டே ஷிவானி இன்று பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.