பாய்ஸ், காதல், சுப்ரமணியபுரம் ஆகிய ஹிட் திரைப்படங்களில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? ஷாக்கிங் தகவல்

0
kadhal
kadhal

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் நடிகர்கள் ஒரு கதையில் நடிக்க மறுத்து அதன் பிறகு வேறொரு நடிகர் நடித்து செம ஹிட் ஆவது வழக்கமான ஒன்றுதான்.

இந்த நிலையில் பாய்ஸ், காதல், சுப்ரமணியபுரம் ஆகிய மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தவறவிட்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து விட மாட்டோமா என படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வாரிசு நடிகரின் கதை தான் இது.

அட அந்த வாரிசு நடிகர் வேற யாரும் இல்ல நம்ப பாக்யராஜ் மகன் சாந்தனு தான். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் முதலில் நடிப்பதற்கு சாந்தனுவை தான் அணுகினாராம் ஷங்கர், ஆனால் பாக்கியராஜ் ரொம்ப சின்ன பையனா இருக்கான் கொஞ்ச நாள் போகட்டும் என அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஷங்கர் தயாரித்த காதல் படத்தில் முதலில் நடிக்க சாந்தனுவை தான் தொடர்பு கொண்டார் ஆனால் பாக்யராஜ் படம் ரொம்ப ட்ராஜடியா இருக்கும் எனவும் முதல் படம் கமர்சியல் படமாக கொடுக்க வேண்டும் என அந்த வாய்ப்பையும் தட்டிக் கழித்தார்.

அதன்பின்பு சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரத்தில், சாந்தனுவை நடிக்க கேட்க என் மகன் முதல் படம் நடிச்சுட்டு இருக்கான் அது முடிஞ்சதும் வேற படம் பண்றது பத்தி யோசனை செய்யலாம் என தட்டிக் கழித்தார் பாக்கியராஜ்.

இந்த தகவலை ஒரு இணையதளம் ட்டரி பகிர்ந்துள்ளது, அதற்கு சாந்தனு “படம் எல்லாம் கரெக்ட் ஆனால் அந்த படங்களை தவிர்க்க காரணம் இவை கிடையாது என கூறியுள்ளார்”. எது எப்படியோ ஆனால் மூன்று படங்களை தவற விட்டு தற்போது முன்னணி நடிகராக வேண்டும் என முட்டிமோதி கொண்டிருக்கிறார் சாந்தனு.

shandhanu
shandhanu