அருண் விஜய்யின் பாக்சர் பட போஸ்டர் இணையதளத்தில் லீக்.! வருத்தத்துடன் வீடியோவை வெளியிட்ட அருண் விஜய்

0
arun vijay
arun vijay

அருண் விஜய் நடிப்பில் உருவான boxer படத்தின் பர்ஸ்ட் லுக் இணையதளத்தில் கசிந்ததால்தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதாக கூறிய அருண் விஜய்.

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் அனைத்து படங்களும் வெற்றி பெற்று வருகின்றனர். இவரது நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அருண் விஜய் மற்றும் இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பாஸ்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று இணையதளத்தில் கசிந்தது.

இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனால் மனமுடைந்த அருண் விஜய் இரவு ஒரு மணி அளவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனக்கு தெரியாமலேயே boxer படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையதளத்தில் கசிந்துவிட்டது. அதனால்தான் டி இமான் வைத்து படக்குழுவினர் boxer படத்தின் போஸ்டரை  வெளியிட்டார்கள் என அவர் தெரிவித்தார் மேலும் 9 மாத கடின உழைப்பால் இப்படம் உருவாகியுள்ளது. உங்கள் ஆதரவுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.