பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டில் இந்த திரைப்படம் தான் முதலிடம்.! இதோ முதல் 5 திரைப்படங்களின் லிஸ்ட்

0

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி அடைகிறது என்றால் அது பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை வைத்து தான் சொல்ல முடியும். அதேபோல் தமிழ்சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களுக்கு மேல் ரிலீசாகின்றன அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுகின்றனாவ என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் தான் அதிகமாக வெற்றி பெறுகின்றன, அதேபோல் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியாகிய திரைப்படங்கள் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது, இந்த வருடத்தில் முதலில் ரஜினியின் பேட்ட திரைப்படமும், மற்றும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகி மக்களைக் கவர்ந்தது.

அண்மையில் வெளியாகிய காப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் கல்லா கட்டி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் வெளியாகிய தமிழ்படங்களில் அதிக வசூல் செய்த முதல் ஐந்து திரைப்படத்தின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் முதலிடத்தில் பேட்ட திரைப்படமும், இரண்டாம் இடத்தில் நேர்கொண்டபார்வை திரைப்படமும், மூன்றாவதாக சூப்பர் டீலக்ஸ் படமும் , நான்காம் இடத்தில் விஸ்வாசம், ஐந்தாம் இடத்தில் காப்பான், என முதல் 5 இடத்தை இந்த திரைப்படங்கள்தான் பிடித்துள்ளன.