பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் கண்ணு தெரியாத டீச்சராக நடித்த நடிகையா இது..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஆர்யா இவர் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனரான ராஜேஷ்ன் இரண்டாவது படமான பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நயன்தாரா சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது காமெடி கலந்த திரைப்படமாக இருப்பின் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் கண்ணு தெரியாத ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அன்னபூரணி.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் ஆர்யா தன்னுடைய வெகுளித்தனமான  சந்தோசத்தை விட்டுவிட்டு தீயாக வேலை செய்தது இந்த பெண்ணை பார்த்ததன் பிறகுதான் பின் அவர் நடத்திய டுட்டோரியல் கல்லூரியில் கூட இவரை ஆசிரியராக கொண்டு வந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வைப்பார்.

இவ்வாறு பிரபலமான அன்னபூரணி சன் டிவி, விஜய் டிவி, கேப்டன், ராஜ், வசந்த் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிப்பது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டி வருகிறார்.

annaporani-2
annaporani-2

அந்த வகையில் இவர் ராமானுஜர் என்ற தொடரின் மூலம்தான் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து மாமா மாப்பிள்ளை, பாசமலர், சொந்தபந்தம், மோகினி, தேவதை, மரகதவீணை, வள்ளி, கல்யாண வீடு, பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற பல்வேறு சீரியலில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் இவர் கதாநாயகிக்கு அண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

annaporani-1
annaporani-1

Leave a Comment