டெல்லி மும்பையில் இருந்து ஒரு நடிகர் வருவார் அன்றுதான் அஜித்திற்கும் விஜய்க்கும் ஏழரை..? வயித்தெரிச்சலில் பகிர் கிளப்பிய பிரபல நடிகர்…

Bose venkat : நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் சின்னத்திரையில் முதன்முதலாக சன் தொலைக்காட்சியில் மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் மெட்டி ஒலி சீரியலில் அவரின் நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் சின்னத்திரையில் கிடைத்தது. இதனை பயன்படுத்தி வெள்ளி திரைக்கு நுழைந்தார்.

வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு திறமையால் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பெயரையும் புகழையும் சம்பாதித்தார் அதன் மூலம் இவருக்கு குணச்சித்திர நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்தது அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்த போஸ் வெங்கட் திடீரென படத்தை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார் அந்த வகையில் இவர் இயக்கிய கன்னி மடம் திரைப்படம் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் ஆனால் கன்னிமடம் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் படத்தை இயக்கியதில் இருந்து படத்தில் நடிப்பதை விட்டு விட்டார் அடுத்த படம் எப்பொழுது என யோசித்து கொண்டே இருக்கிறார் இந்த நிலையில் போஸ் வெங்கட் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வேதனையை மக்களிடம் கொட்டி தீர்த்துள்ளார். அதாவது சிறிய பட்ஜெட் திரைப்படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தாலும் அந்த திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடுவதில் மிகுந்த சிரமம் தான்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் தமிழ் சினிமா எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தால் சினிமா பெரிய சாதனை படைத்ததாக மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் அது இறந்து கொண்டிருக்கிறது அதுதான் உண்மை தமிழ் சினிமா தற்பொழுது நம்முடைய கையிலே கிடையாது வெளி ஆட்கள் கையில் தான் இருக்கிறது.

விஜய் அஜித்தை வைத்து பணம் சம்பாதிக்க பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை மூட்டையில் கட்டி இரைக்கிறார்கள் அதேபோல் அஜித் விஜய் திரைப்படத்திற்கு ஆயிரம் திரையரங்குகள் நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது அதுமட்டுமில்லாமல் அஜித் விஜய் திரைப்படம் வெளியானால் அப்பொழுது எந்த ஒரு திரைப்படமும் வெளியாக கூடாது அப்படியே வெளியானாலும் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள்.

இவர்களைத் தாண்டிய படம் இல்லை என்ற அடையாளத்தை தற்போது எழுந்து வருகிறது இந்த நிலைமை வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது விரைவில் OTT இணையதளத்தில் யார் சூப்பர் ஸ்டார் என்ற நிலைமை வரும் மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஒரு நடிகர் வருவார் அன்றுதான் விஜய்க்கும் அஜித்திற்கும் ஏழரை. அப்பொழுது தான் விஜயம் அஜித்தும் சாதாரணமாக நடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

விஜய் அஜித் அழும் காலம் நெடுந்தொலைவில் இல்லை விரைவில் அந்த காலம் வரும் அவர்கள் எண்ணங்கள் மாறி தமிழ் சினிமாவை வாழ அனுமதிக்க வேண்டும் எல்லா படங்களும் வெளியானால்தான் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும் என போஸ் வெங்கட் தன்னுடைய மனவேதனையை கொட்டி தீர்த்துள்ளார்