தமிழ்நாட்டில் பிறந்து.. தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்யும் 8 ஹீரோயின்கள் – யார் யார் தெரியுமா.? லிஸ்ட் இதோ..

tamil-actresses
tamil-actresses

திறமையான நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தனது திறமையை காட்டி அங்கு உச்ச நட்சத்திரமாக மாறிவிடுவார்கள் அந்த வகையில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகைகள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

1. நடிகை சாய் பல்லவி கோவையில் பிறந்து மருத்துவம் பயின்று பின் டான்சராக விஸ்வரூபம் எடுத்து ஒரு கட்டத்தில் நடிகையாக மாறினார் முதலில் மலையாளத்தில் உருவான பிரேமம் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு இவர் தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பட வாய்ப்பு அள்ளி தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார்.

2. சமந்தா சென்னையில் பிறந்து மாடல் அழகியாக விஸ்வரூபம் எடுத்து ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் நடிக்க வந்தவர். இவர் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து அசத்தினார் ஒரு கட்டத்தில் தெலுங்கிலும் பிரயாணம் கண்டார் இதனால் தென் இந்திய சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நடிகையாக இருக்கிறார்.

3.  நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் பிறந்தவர் ஆனால் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பட்டி பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். ஒரு கட்டத்தில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பட வாய்ப்பு கைப்பற்றி நடித்து வருகிறார்.

4. நடிகை திரிஷா தமிழ் சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் சென்னையில் தான் பிறந்தார் முதலில் மாடல் அழகியாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார் அதன் பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மௌனம் பேசியதே படம் இவருக்கு நல்ல படமாக அமைந்தது அதன் பிறகு தென்னிந்திய உலகம் முழுவதும் பட வாய்ப்பு கைப்பற்றி கொடி கட்டி பறந்து வருகிறார்.

5. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் இவர் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால் வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவர் ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தார் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்து தென்னிந்திய  முழுவதும் பல பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார்.

இவர்களைப் போல.. பிரியா பவானி சங்கர், நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா மேனன் போன்றவர்களும் தமிழ்நாட்டில் பிறந்து தென்னிந்திய உலகம் முழுவதும் பட வாய்ப்பை கைப்பற்றிய நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.