வசதியான குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களை அனுபவித்த விஜயகாந்த்.. துணிச்சலாக செயல்பட்டு மக்கள் மனதை கவர்ந்த கேப்டன்

Captain Vijayakanth: நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார் இவருடைய உடல் மருத்துவமனையிலிருந்து அஞ்சலிக்காக இவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மறைவு ரசிகர்கள் திரைவுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் இவர் குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

விஜயகாந்த் மதுரையில் 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி கே.என் அழகர்சாமிக்கும் ஆண்டாளுக்கும் மகனாக பிறந்தார். வசதியான குடும்பத்தை சேர்ந்த இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது பிறகு தனது நண்பர் இப்ராஹிம் சாவுத்தரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்னை வந்தார். இவருடைய உண்மையான பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த் என மாற்றினார்.

ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை இந்த சூழலில் 1979ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். ஆனால் இப்படம் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை தொடர்ந்து ஹீரோவாக நடிக்கவும் முயற்சி செய்துள்ளார். அதன்படி அகல் விளக்கு, நீரோட்டம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

கேப்டன் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.. கதறியழும் பிரேமலதா.. குவிந்த தொண்டர்கள்

ஆனால் இந்த படங்கள் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை. 1980ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் என்ற படம் சூப்பர் ஹிட் வெற்றினை பெற்றது இதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தனர். அந்த வகையில் சட்டம் ஒரு இருட்டறை, வெற்றி நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி, எங்கள் குரல் என பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த விஜயகாந்த் ஒரு வருடத்தில் 10 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்தார்.

இந்த நேரத்தில் கமல்ஹாசனுக்கும் பயங்கர போட்டியாக விளங்கிய விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பேற்றார். தலைவராக இருந்த பொழுது நடிகர் சங்கத்திற்கான கடன் முழுவதையும் அடைத்தார் நடிகர் சங்க தலைவரில் இருந்து விலகும் பொழுது கூடுதலாக பணத்தையும் சேர்த்து வைத்து சென்றார்.

இவ்வாறு இந்த கடன்களை அடைப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர்களை சிங்கப்பூர், மலேசியா போன்ற  வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் ஏஜென்சி ஒன்று 70 லட்சம் ரூபாய் ஏமாற்றப் பார்த்தது அதனை தெரிந்துக் கொண்ட விஜயகாந்த் ஹோட்டலில் வைத்து பணத்தை ஏமாற்ற முயன்ற ஏஜென்சிக்காரரை அடித்து பணத்தை மீண்டும் பெற்றார்.

ஒரு தடவை கூட உங்க அப்பா போன் பண்ணவே இல்லை.. ரோகினி மீது சந்தேகப்படும் முத்து, அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இதனை அடுத்து ஈழம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரின் பெயரை கேட்டு பதறிய தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மட்டும்தான். ஈழ மக்களுக்காக முதலில் உண்ணாவிரதம் இருந்தவர் மேலும் தனது மகனுக்கு பிரபாகரன் என பெயர் சூட்டினார். பிறகு சமூகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காமிக்க ஒரு கட்டத்தில் அரசியலிலும் இறங்கினார்.

மேலும் தான் கஷ்டப்பட்டது போல் சினிமாவில் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக புதுமுக இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார். இது ஒரு புறம் இருக்க இப்ராஹிம் ராவுத்தரும் விஜயகாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்க இப்ராஹிம் என்ன சொல்கிறாரோ அதை தான் விஜயகாந்த் செய்வார் இருவரும் நட்புக்கு இலக்கணம் என்று கூறலாம்.

கடைசியாக 2015 ஆம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் அரசியலில் நுழைந்த இவர் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக பணியாற்றி வந்தார் ஒரு கட்டத்தில் உடல்நிலை குறைவு ஏற்பட அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார். அதன் பிறகு முழுவதுமாக ஓய்வில் இருந்து வந்த விஜயகாந்த் மருத்துவமனையில் உடல் நலம் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் இவருடைய இழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.