வலிமை படத்தை பார்க்க வந்த போனி கபூர் மிரளும் அளவிற்கு ரசிகர்கள் என்ன செய்துள்ளார்கள் பார்த்தீர்களா.! அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.?

நேற்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் அடுத்ததாக அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை h வினோத் அவர்கள் தான் இயக்கியுள்ளார். வலிமை திரைப்படம் இன்று வெளியிட முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது அதாவது கடந்த 2018ம் ஆண்டு இதே பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய சினிமாவையே உலுக்கும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது.

அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி போனி கபூரின் மனைவி நடிகை ஸ்ரீதேவி அவர்கள் உறவினர்களின் திருமணத்திற்காக துபாய் சென்று அங்கு திடீரென உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தான் 2018 ஆம் ஆண்டு சினிமா உலகையே உலுக்கியது இதனை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் இன்று போனிகபூர் கொஞ்சம் சந்தோஷத்தில் இருப்பார் காரணம் வலிமை திரைப்படம்தான்.

பல பிரச்சனைகளுக்கு இடையே வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது இன்று ரிலீஸ் ஆகிவிட்டது இதற்கு முன் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை போனிகபூர் அவர்கள் சென்னை வந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்த்து வியந்ததாக கூறியிருந்தார். அப்பொழுதே அமர்க்களப்படுத்தினார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் வலிமை திரைப்படத்தின் காட்சிகள் பல இடங்களில் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டது அதேபோல் வலிமை திரைப்படத்தை காண போனிகபூர் அவர்கள் திரையரங்கம் வந்திருந்தார்கள் அப்பொழுது அஜித் ரசிகர்கள் பலரும் அவரை வரவேற்கும் வகையில் பாலபிஷேகம் செய்து போனி கபூர் அவர்களை மிரள வைத்துள்ளார்கள்.

இப்பொழுது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment