போனி கபூர் வெளியிட்ட அடுத்த அப்டேட்- உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் ஹிந்தி, தெலுங்கு ரசிகர்கள்.!

போனி கபூர் தயாரிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் மிக பிரம்மாண்ட அளவில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. வலிமை படம் முழுக்க முழுக்க பைக் ரேஸ்,  சண்டை காட்சிகள் அதிகமாக இருந்தாலும் அதையும் தாண்டி சில படத்தின் தேவைக்கு என்ன வேண்டுமோ  அதையெல்லாம் இயக்குனர் ஹச்.வினோத்  கொடுத்திருப்பதால் படம் மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக மாறும் என தெரியவந்துள்ளது.

இதுவரை வெளிவந்த அப்டேட்டும் அந்த மாதிரிதான் இருந்து வந்துள்ளன. பஸ்ட் லுக் போஸ்டர் தொடங்கி கடைசியில் வெளிவந்த ட்ரைலர் வரை எதிலுமே குறை சொல்லும்படி  எதுவும் இல்லாமல்  எல்லாம் பாசிட்டிவ் ஆகவே இருப்பதால்  ரசிகர்கள், பிரபலங்கள் தொடங்கிய அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர் வலிமை படத்தை பார்க்க..

வலிமை திரைப்படம் ஜனவரி 13ம் தேதி பொங்கல் அன்று உலக அளவில் கோலாகலமாக ரிலீஸ் செய்ய இருக்கிறது அதற்கு முன்பாக வலிமை திரைப்படம் அமெரிக்காவில் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஒரு தகவல் உலா வருகிறது. இது இப்படியிருக்க வலிமை படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி 15 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி அசத்தி  உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் வெளியாகிய வலிமை படத்தின் டிரைலர் தற்போது இந்தியிலும், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஜனவரி 13ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகும் என போனி கபூர் குறிப்பிட்டுள்ளார் அதிலும் குறிப்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நிச்சயம் படம் எதிர்பார்த்தபடி ரிலீஸாகும் என அடித்து சொல்லி உள்ளார்.

தற்போது அஜித் ரசிகர்கள் இச்செய்தி கொண்டாட வைத்துள்ளது. ஆனால் ஒரு சின்ன வருத்தமான செய்தியும் கிடைத்துள்ளது அதாவது தற்போது நிலவி வரும் சூழல் சரியில்லாத காரணத்தினால் திரையரங்கில் 50%  பார்வையாளர்களை பார்க்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment