பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த போனிகபூர்.! துணிவுடன் வெளியிட்ட முதல் அப்டேட்..

0
thunivu
thunivu

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வரும் நாளை வரும் என இழுத்துக் கொண்டே போனது அனால் தற்போது படக்குழு தற்போது நிலைமையான ஒரு தேதியை அறிவித்துள்ளது இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து சமுத்திரகனி, மஞ்சு வாரியார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து துணிவு திரைப்படத்திலிருந்து போஸ்டர்கள் மட்டும் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் படகுழு ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள் ஆனால் அது எந்த தேதியில் என்று குறிப்பிடவில்லை.

இதனால் இன்றைக்கு வரும் நாளைக்கு வரும் என இணையதளத்தை பரபரப்பாக வைத்திருந்தார்கள் அஜித் ரசிகர்கள் ஆனால் தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அவர்கள் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

அதாவது நடிகர் அஜித் அவர்கள் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வழக்கமாக அஜித் அவர்களுக்கு சிறப்பான நாள் என்றால் அது வியாழன் கிழமை தான் ஆனால் டிசம்பர் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் இதை அஜித் இடம் இருந்து யாருமே எதிர்பார்க்கவில்லை என்று கூறபடுகிறது.

மேலும் சில்லா சில்லா எனத் தொடங்கும் இந்த பாடலை ஜிப்ரான் இசையமைக்க அனிருத் அவர்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித் ரசிகர்களுக்கு டிசம்பர் 9ஆம் தேதி ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறதாக தெரிகிறது.