தனது மனைவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான்.! மாமன்னன் படத்தின் விழாவில் கலந்துக்கொண்ட போனி கபூர்..

திரைவுலகில் அழகான மற்றும் கவர்ச்சியான நடிகை என்றால் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான் என மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நேற்று சென்னையில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கமலஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

அப்படி சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் தான் தயாரிப்பாளர் போனி கபூர். தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி வரும் போனிகபூர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட மூன்று திரைப்படங்களையும் தொடர்ந்து தயாரித்து மிகப்பெரிய வெற்றினை கண்டார்.

இந்நிலையில் போனி கபூர் நேற்று நடந்த மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது மனைவி ஸ்ரீதேவியையும் கீர்த்தி சுரேஷையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என்னைப் பொருத்தவரை திரைவுலகில் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு மிகவும் புத்திசாலித்தனமாக மற்றும் கவர்ச்சிகரமான நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இவருடைய பேச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இன்று போனி காபூர் ஸ்ரீதேவி திருமண நாளை முன்னிட்டு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 1996ஆம் ஆண்டு ஜூன் 2ம் தேதி தான் எங்கள் திருமணம் நடைபெற்றது இன்று 27 வருடங்கள் நிறைவடைந்து விட்டது என்று ஸ்ரீதேவியுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் மேலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும் வடிவேலு தனது கேரக்டரில் பின்னி பெடல் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version