காமெடி நடிகர் போண்டா மணி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் இதுவா!! ஹீரோயின் இவங்களா.!!

0

Bondamani act as a hero in tamil movie:கவுண்டமணி, வடிவேல் முதல் சந்தானம் வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்களை தொடர்ந்து காமெடி நடிகர் போண்டா மணி ஹீரோவாக நடிக்க உள்ளார்.

அந்தவகையில் குணச்சித்திர நடிகர் போண்டாமணி தற்போது ஹீரோவாக அவதாரம் எடுக்க போகிறார். இவர் காமெடியனாக சுமார் 270 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஆரம்ப காலத்தில் செந்தில், கவுண்டமணியுடன் இணைந்து காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைதொடர்ந்து பின்னர் வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகிபாபு போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள திரைப்படத்தை இயக்குனர் பகவதி பாலா இயக்குகிறார். இவருக்கு ஹீரோயினாக நடிகை சர்மிலி நடிக்க இருக்கிறார். இவர் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில சின்ன பண்ணை பெரிய பண்ணை என பெயரிட்டுள்ளனர்.

இதுபற்றி போண்டாமணி அவர்கள் பேசும்போது தான் சினிமாவுக்கு வந்து 35 வருடங்கள் கடந்துவிட்டன எனவும் முதன் முதலில் பாக்யராஜ் இயக்கிய பவுனு பவுனுதான் என்ற படத்தில் அறிமுகமானேன் எனவும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இவர் தற்போது ஹீரோவாக சின்ன பண்ணை பெரிய பண்ணை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் முக்கிய கதை என்னவென்றால் போதைக்கு அடிமையான ஒரு மனிதனைப் பற்றிய கதையாம். மேலும் இந்த  திரைப்படம் கண்டிப்பாக பேசப்படும் விதத்தில் இருக்கும் என போண்டாமணி அவர்கள் கூறியுள்ளார்.