பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் போண்டாமணியின் மகள் எவ்வளவு மார்க் எடுத்து உள்ளார் தெரியுமா.! கல்லூரி படிப்புக்கு உதவும் பிரபலம்…

நடிகர் வடிவேலு அவர்களுடன் இணைந்து சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்தவர் போண்டாமணி இவர் எம் மாரிமுத்து செட்டியார் மகேஸ்வரி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் போண்டாமணி இவருடைய தாயகம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியாகும் அங்கு மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றம் ஒன்றை நடத்தி நண்பர்களோடு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

தமிழ்நாட்டில் நடிகனாக வாய்ப்பு இருக்கிறது என நினைத்து இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்து நடிகராக மாறினார். 1993 ஆம் ஆண்டு மணிக்குயில், பொன்விலங்கு, ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் முறை மாப்பிள்ளை, கோயம்பத்தூர் மாப்பிள்ளை, வாழ்க ஜனநாயகம், அருவா வேலு, பொங்கலோ பொங்கல், பாரதி கண்ணம்மா, நேசம் புதுசு, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நோய் வாய் பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். இவருக்கு தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நடிகர்கள் பண உதவி செய்து இவரை காப்பாற்றினார்கள்.

இந்த நேரத்தில் போண்டாமணியை ஹாஸ்பிடலில் பார்க்க வந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் பிளஸ் டூ முடித்ததும் தன்னுடைய வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவசமாக சீட் தருவதாக கூறியிருந்தார் அதன்படி போண்டாமணியின் மகள் பிளஸ் 2வில் 400 மதிப்பெண்கள் பெற்று பாசாகிவிட்டார் இதனால் சொன்னபடி ஐசரி கணேஷ் ஒரு பைசா கூட வாங்காமல் தன்னுடைய கல்லூரியில் இடம் கொடுத்துள்ளார்.

தற்பொழுது போண்டாமணியின் மகள் அந்த கல்லூரியில் ஃப்ரீயாக படித்து வருகிறார்.

Leave a Comment