சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மி தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

பொதுவாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் இருந்து வருகிறதோ அதேபோல் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி தன சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நட்சத்திரங்களுக்கும் தனி ஒரு இடம் இருந்து வருகிறது பொதுவாக தன்னுடைய குழந்தை பருவத்திலேயே சினிமாவில் பிரபலமடைந்து தற்போது முன்னணி நடிகைகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளாரகள்.

அந்த வகையில் பேபி ஷாலினியில் தொடங்கி தற்போது மீனாவின் மகள் பேபி நைனிகா வரை அனைவரும் குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவில் பிரபலமடைந்து உள்ளார்கள்.மேலும் இதனை தொடர்ந்து அஜித்தின் இரண்டு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த பேபி அனிகா தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்த வருகிறார். ஏனென்றால் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் தற்பொழுது சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குழந்தை தற்பொழுது திருமணமாகி செட்டிலாகி உள்ளார் இது குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அதாவது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு திருமணமாகி உள்ளது.

சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்றது இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஹிட்டானது. இவ்வாறு இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கூடி விரைவில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கதாநாயகிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.

மேலும் பொம்மியை குழந்தையின் இயற்பெயர் பிரகர்ஷிதா. இவர் சந்திரமுகி படத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் கல்லூரி படித்து முடித்தவுடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இப்பொழுது இவருக்கு தற்பொழுது பெண் குழந்தை பிறந்துள்ளது மேலும் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த நிலையில் இயக்குனர் வாசு பேட்டி ஒன்றில் கொடுத்திருந்தார்.

santhiramuki
santhiramuki

ஆனால் இந்த இடத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை ராகவா லாரன்ஸ் மேலும் இந்த படம் சந்திரமுகி திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்பதனால் பொம்மையாக நடித்த பிரஹர்ஷிதா நடிப்பாரா என்ற கேள்வி எழுப்பி உள்ளது அதற்கு பேட்டி அளித்த நடிகை பிரஹர்ஷிதா தற்பொழுது படிப்பை முடித்துவிட்டு போஸ்ட் ப்ரோமோஷன் கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வருகிறேன் என்றும் அதேபோல் பல்வேறு கதைகளை கேட்டு வருகிறேன் விரைவில் என்னை வெள்ளி திரையில் காணலாம் எனவும் கூறுகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்திருக்கிறது எனவே தற்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை தற்போது தான் வெளியிட்டு இருக்கிறார்.

Leave a Comment