இரண்டு முன்னணி நடிகர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!! மோப்ப நாயுடன் சோதனை.!!

0

bomb threat on leading tamil actors house: சில மாதங்களாக தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே விஜய், சூர்யா, ரஜினிகாந்த் போன்ற சில திரையுலக பிரபலங்களின் வீடுகளில்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.

முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொண்டு வீடுகளில் போலீஸ் பந்தோபஸ்து அளிக்கப்பட்டது அதன் பின் தற்போது இது வதந்தி என தெரியவர பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

மேலும் இந்த நிலையில் இன்று நடிகர் தனுஷ் மற்றும் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த செய்தி தற்போது சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மர்ம நபர் ஒருவர் இன்று காவல்துறைக்கு போன் செய்து அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அதுபோலவே விஜயகாந்த் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் அதனை தொடர்ந்து போலீசார் மோப்ப நாய் வெடிகுண்டு தடுப்பு பிரிவோடு இருவர் வீட்டிற்கும் சென்று சோதனை செய்தனர். சோதனை செய்ததும் புரளி எனத் தெரியவந்துள்ளது எனவே தற்போது போன் செய்த அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.